For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“பும்ரா எங்கதான் சார் இருக்கார்?” கம்பேக் தேதியை அறிவித்த ரோகித் சர்மா.. ரசிகர்கள் குழப்பம்- விவரம்

மும்பை: காயத்தால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக ஓய்வில் உள்ள வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் உடல்நிலை குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா புதிய தகவலை கொடுத்துள்ளார்.

இந்திய அணி தற்போது நியூசிலாந்துடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை விளையாடி முடித்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் அனைத்திலும் வெற்றி கண்டு ஒயிட் வாஷ் செய்துள்ளது.

இதனையடுத்து அடுத்ததாக அந்த அணியுடனான டி20 தொடரில் மோதவுள்ளனர். இதில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி போன்றோருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை பஞ்சாயத்திற்கு தீர்வு.. பாக். வாரிய தலைவர் கொடுத்த புதிய அப்டேட்.. ஃபிப்.4 தான் கடைசி ஆசிய கோப்பை பஞ்சாயத்திற்கு தீர்வு.. பாக். வாரிய தலைவர் கொடுத்த புதிய அப்டேட்.. ஃபிப்.4 தான் கடைசி

இருவர் இல்லை

இருவர் இல்லை

டி20 கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக சீனியர் வீரர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு காரணம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மற்றும் உலகக்கோப்பை தொடர் தான். வீரர்களின் பணிச்சுமையை குறைப்பதற்காக டி20 தொடர்களில் ஓய்வு தரப்பட்டு வருகிறது. ஆனால் ஜஸ்பிரித் பும்ரா,ரவீந்திர ஜடேஜா ஆகியோர் என்ன ஆனார்கள் என்பதே ரசிகர்களுக்கு மறந்துவிடும் அளவிற்கு சென்றுள்ளது.

நீண்ட ஓய்வு

நீண்ட ஓய்வு

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் காயத்தினால் பாதிக்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா பல்வேறு முக்கிய தொடர்களை தவறவிட்டார். கடந்த இலங்கை தொடரில் கம்பேக் தருகிறார் என அறிவிக்கப்பட்ட சூழலில் கடைசி நேரத்தில் மீண்டும் முதுகுவலி பிரச்சினை எனக்கூறி வெளியேறினார். அடுத்ததாக வரவுள்ள ஆஸ்திரேலியாவுடனான முதல் 2 டெஸ்ட்களுக்கான அணியிலும் அவர் சேர்க்கப்படவில்லை.

ரோகித் சர்மா விளக்கம்

ரோகித் சர்மா விளக்கம்

இந்நிலையில் இதுகுறித்து ரோகித் சர்மா பதில் கொடுத்துள்ளார். அதில், பும்ராவின் நிலைமை குறித்து எனக்கு தெளிவாக தெரியவில்லை. இதுவரை கிடைத்த தகவலின் படி பார்த்தால் ஆஸ்திரேலியாவுடனான கடைசி 2 டெஸ்ட்களுக்கு வருவார் எனத் தெரிகிறது. மீண்டும் ஒருமுறை பும்ராவின் விஷயத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. ஏனென்றால் முதுகுவலி என்பது சற்று பெரிதாகும். அடுத்தடுத்து போட்டிகள் இருப்பதால் அவர் அணிக்கு தேவை.

மருத்துவர்களின் கருத்து

மருத்துவர்களின் கருத்து

பெங்களூருவில் உள்ள மருத்துவர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட்களிடம் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகிறோம். அவருக்கு தேவையான அவகாசத்தை கொடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளனர். அதன்படி தான் தற்போது செய்து வருகிறோம் என ரோகித் கூறியுள்ளார். பும்ராவின் இடத்தை தற்போது முகமது சிராஜ் தான் நிரப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, January 25, 2023, 12:45 [IST]
Other articles published on Jan 25, 2023
English summary
Captain Rohit sharma gives a hint about Jasprit bumrah's Return to Team India, here is the health update of him
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X