For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வேண்டும் என்றே ஓய்வு.. நாளைய போட்டியில் ஆஜர்.. இந்தியாவை காலி செய்ய நியூசி.யின் மாஸ்டர் பிளான்

Recommended Video

இந்தியாவை காலி செய்ய நியூசி.யின் மாஸ்டர் பிளான்

மான்செஸ்டர்: இந்தியாவுக்கு எதிரான முக்கிய அரையிறுதியில் பெர்குசன் நிச்சயமாக விளையாடுவார் என்று நியூசி. அணி பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறியிருக்கிறார்.

உலக கோப்பை தொடரில் மான்செஸ்டரில் நாளை நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா, 4ம் இடத்தில் இருக்கும் நியூசிலாந்தை சந்திக்கிறது. வரும் 11ம் தேதி நடக்கும் 2வது அரை இறுதியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.

லீக் தொடரில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது.ஆனால் உலக கோப்பைக்கு முன்பு நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் நியூசி.யிடம் இந்தியா தோற்றிருந்தது. ஆக, அரையிறுதி கடும் சவாலாக இருக்கும்.

கட்டாயம் விளையாடுவார்

கட்டாயம் விளையாடுவார்

இந் நிலையில், நியூசி. அணியின் வேகப்பந்துவீச்சாளர் பெர்குசன் விளையாடுவார் என்று பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: நாக் அவுட் போட்டிகளில் அவர் கண்டிப்பாக இருப்பார்.

48 மணி நேரம் ஓய்வு

48 மணி நேரம் ஓய்வு

அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதே முன் எச்சரிக்கையாக தான். தொடையில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக அவருக்கு 48 மணி நேரம் ஓய்வு தேவை. அதனால் தான் ஓய்வு தரப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன், உடல் தகுதியை பெற்று விடுவார்.

முதல் உலக கோப்பை

முதல் உலக கோப்பை

நியூசி. பவுலிங்கின் முக்கிய நபர் பெர்குசன். இதுதான் அவருக்கு முதல் உலக கோப்பை என்ற போதிலும் சிறப்பாகவே செயல்படுகிறார். நிச்சயமாக, இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அற்புதமாக விளையாடுவார். எதிரணியினருக்கு நெருக்கடி தருவார்.

மிரட்டல் பவுலிங்

மிரட்டல் பவுலிங்

அந்த நெருக்கடியின் வழியாக, விக்கெட்டுகளை வீழ்த்துவார். இந்தியாவுக்கு எதிராகவும் கண்டிப்பாக மிரட்டலான பவுலிங்கை அவரிடம் இருந்து எதிர் பார்க்கலாம் என்று கூறினார்.

சவாலான ஆட்டம்

சவாலான ஆட்டம்

நியூசி.யை பொறுத்தவரை,தொடக்க வீரர் குப்தில் பார்மில் இல்லாதது பெரும் பின்னடைவு. வலுவான மிடில் ஆர்டர் பேட்டிங் பெரிய பலம். பவுலிங்கில் போல்ட், பெர்குசன் அசத்தி வருகின்றனர். அதிலும், பெர்குசன் 145 முதல் 150 கிமீ வேகத்தில் வீசுபவர். ஆக, இந்தியாவுக்கு சவாலான ஆட்டம் காத்திருக்கிறது.

Story first published: Monday, July 8, 2019, 18:03 [IST]
Other articles published on Jul 8, 2019
English summary
Ferguson will play against india says newzealand coach gary stead.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X