For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா - பாக். போட்டிக்கு டிக்கெட் கேட்கும் 4 லட்சம் மக்கள்.. போட்டி நடக்குமா?

லண்டன் : காஷ்மீர் தாக்குதல் எதிரொலியாக இந்தியா, பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பையில் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது பற்றிய கருத்துக்கள், விவாதங்கள் சூடு பிடித்துள்ள நிலையில், இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு இறுதிப் போட்டியை விட அதிகமாக உள்ளது என உலகக்கோப்பை தொடருக்கான இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் மட்டுமில்லை.. எதுவுமே விளையாடக் கூடாது.. கங்குலி கிரிக்கெட் மட்டுமில்லை.. எதுவுமே விளையாடக் கூடாது.. கங்குலி "பொளேர்" கருத்து!

போட்டி எப்போது?

போட்டி எப்போது?

2019 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை வரும் மே மாத இறுதியில் தொடங்கி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஜூன் 16 அன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஓல்ட் ட்ராபோர்ட் மைதானத்தில் மோத உள்ளன.

அதிக விண்ணப்பங்கள்

அதிக விண்ணப்பங்கள்

ஓல்ட் ட்ராபோர்ட் மைதானத்தில் 25,000 இருக்கைகளே உள்ள நிலையில், அந்த போட்டிக்கு சுமார் 4,00,000 நபர்கள் டிக்கெட் கேட்டு விண்ணப்பித்து இருப்பதாக உலகக்கோப்பை தொடர் இயக்குனர் ஸ்டீவ் எல்வொர்த்தி தெரிவித்தார்.

இதை விட அதிகம்

இதை விட அதிகம்

இது இங்கிலாந்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு உரிய ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளின் மோதல் மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விண்ணப்பங்களை விட மிகவும் அதிகம் என கூறியுள்ளார் ஸ்டீவ்.

இறுதிப் போட்டி விண்ணப்பங்கள்

இறுதிப் போட்டி விண்ணப்பங்கள்

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து போட்டிக்கு 2,30,000 முதல் 2,40,000 டிக்கெட் விண்ணப்பங்களும், உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு 2,70,000 வரையிலான டிக்கெட் விண்ணப்பங்களும் வந்துள்ளன. அதை விட இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு தான் அதிக மக்கள் டிக்கெட் கேட்டுள்ளனர்.

போட்டி நடைபெறுமா?

போட்டி நடைபெறுமா?

இப்படி இந்தியா - பாகிஸ்தான் போட்டியைக் காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் காத்திருக்க, அந்த போட்டி நடைபெறுமா என்பதே தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது.

Story first published: Friday, February 22, 2019, 16:16 [IST]
Other articles published on Feb 22, 2019
English summary
India - Pakistan match has more ticket applicants than World Cup 2019 final, says tournament director Steve Elworthy.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X