வார்னர் போட்ட சிம்பிள் ஸ்கெட்ச்.. உதவி செய்த தமிழக வீரர்.. மும்பை அணிக்கு அடுத்தடுத்து 2 ஷாக்!

சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தமிழக வீரர் அடுத்தடுத்து கொடுத்த 2 ஷாட்கள் திணறடித்தது.

மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்க சிறப்பாக அமைந்ததால் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

அவரை எடுத்துவிட்டு.. நடராஜனை தூக்கியது ஏன்? தமிழருக்காக கொதித்த வடஇந்தியர்கள்.. வார்னருக்கு சிக்கல்!

அதிரடி ஓப்பனிங்

அதிரடி ஓப்பனிங்

மும்பை அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, குயிண்டன் டிகாக் முதல் ஓவர் முதலே அதிரடி காட்டினர். முதல் 6 ஓவர்களில் புவனேஷ்வர் குமார், முஜீப் உர் ரஹ்மான், கலீல் அஹ்மது, அபிஷேக் சர்மா என 4 பவுலர்களின் பந்துவீச்சையும் துவம்சம் செய்தனர். குறிப்பாக முஜீப் ரஹ்மான் வீசிய 3வது ஓவரில் அதிகபட்சமாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்ளிட்ட 13 ரன்கள் சேர்ந்தது.

தலைவலி

தலைவலி

இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் பவர் ப்ளேவின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் மும்பை அணியின் கணக்கில் சேர்ந்தது. சென்னை பிட்ச் பேட்டிங்கிற்கு சிறிது கடினமாக இருக்கும் எனக்கூறப்பட்ட நிலையில் மும்பை அணியின் ஓப்பனிங் ஜோடி அதனை மாற்றி அமைக்கும் விதமாக அதிரடி காட்டினர். இதனால் அந்த ஜோடியை பிரிக்க வார்னருக்கு தலைவலி ஏற்பட்டது.

விஜய் சங்கர்

விஜய் சங்கர்

இந்நிலையில் சென்னை அணிக்கு மிகவும் பழக்கப்பட்ட தமிழக வீரர் விஜய் சங்கரை பந்துவீச்சுக்கு கொண்டு வந்து வியூகம் வகுத்தார் வார்னர். விஜய் சங்கர் வீசிய ஆட்டத்தின் 7வது ஓவரில் முதல் 2பந்துகள் சிங்கிளாக மாறியது. 3வது பந்தை அவர் ஸ்லோவர் பாலாக வீச இதனை எதிர்பார்காத ரோகித் சர்மா சிக்ஸருக்கு தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து வெளியேறினார். சிறப்பாக ஆடிய ரோகித் 25 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார்.

2வது மேஜிக்

2வது மேஜிக்

இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட வார்னர், மீண்டும் 9 ஓவரிலேயே விஜய் சங்கருக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த ஓவரில் அவர் வீசிய 2வது பந்தை சூர்யகுமார் யாதவ் சிக்ஸருக்கு தூக்கி அடித்தார். ஆனால் அதற்கு அடுத்த பந்தில் உஷாரான விஜய் சங்கர் ஸ்லோவர் பாலாக வீச, சூர்யகுமார் யாதவ் மீண்டும் தூக்கி அடித்து கேட்ச் ஆனார். இதனால் பவர் ப்ளேவில் சிறப்பாக ஆடிய மும்பை அணியில் 2 விக்கெட்கள் வீழ்ந்து சற்று தடுமாறியது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
SRH Captain warner's Brilliant plan of use Vijay shankar to controll mumbai indians
Story first published: Saturday, April 17, 2021, 20:57 [IST]
Other articles published on Apr 17, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X