இஷானுக்கு பதிலாக ஏன் சூர்யகுமார்? 3 மிக முக்கிய காரணங்கள்.. கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு!

சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணி இஷான் கிஷானுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவை தக்கவைத்ததற்கான 3 முக்கிய காரணங்கள் தெரியவந்துள்ளது.

ஐபிஎல் மெகா ஏலத்திற்காக நேற்று அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் விவரங்களை வெளியிட்டது.

6 ஆண்டு இருள் காலம்.. 10 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த பதவி.. பேட் கம்மின்ஸ் பின்னால் மறைந்துள்ள கதை 6 ஆண்டு இருள் காலம்.. 10 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த பதவி.. பேட் கம்மின்ஸ் பின்னால் மறைந்துள்ள கதை

அதன்படி 5 முறையான மும்பை இந்தியன்ஸ் அணியின் தேர்வுகள் மிக பலமானதாக இருந்தாலும், ஆச்சரியமும் நிறைந்திருந்தது.

மும்பை அணி தக்கவைப்பு

மும்பை அணி தக்கவைப்பு

அந்த அணி தனது முதன்மை தேர்வாக ரோகித் சர்மா, 2வது வீரராக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அயல்நாட்டு வீரராக கெயீரன் பொல்லார்டை தக்கவைத்தது. 3வது வீரராக இஷான் கிஷான் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் இஷான் கிஷானின் மிகவும் இளம் வயதுயடைவர் என்பதால் மும்பை அணிக்கு நீண்ட கால சேவையை கொடுக்கலாம். ஆனால் கடைசி நேரத்தில் இஷான் கிஷானுக்கு பதிலாக சீனியர் வீரர் சூர்யகுமார் யாதவ் அணியில் தக்கவைக்கப்பட்டார். அவருக்கு ரூ.8 கோடி சம்பளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இளம் அதிரடி பேட்ஸ்மேனான இஷானுக்கு பதிலாக சூர்யகுமாரை தேர்வு செய்ய 3 மிக முக்கிய காரணங்கள் இருந்துள்ளன.

 புள்ளிவிவரங்கள்

புள்ளிவிவரங்கள்

இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் இரண்டு வீரர்களுமே கடந்த 2018ம் ஆண்டு மெகா ஏலத்தின் போது தான் மும்பை அணிக்குள் வந்தனர். கடந்த 4 சீசன்களாக ஏராளமான சாதனைகளை இருவரும் செய்திருந்தாலும், புள்ளிவிவரங்களின் படி சூர்யகுமார் யாதவின் கைதான் ஓங்கியுள்ளது. இந்த 4 சீசன்களிலும் சூர்யகுமார் 300+ ரன்களை அடித்துள்ளார். ஆனால் இஷான் கிஷான் ஒரே ஒரு முறை மட்டுமே 300+ ரன்கள் குவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் சூர்யகுமார் யாதவ், தனது நிலையான ஃபார்மினால் தொடர்ச்சியாக வாய்ப்புகளை பெற்று அதிக போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இது முதன்மை காரணமாகும்.

அடுத்த கேப்டன்சி

அடுத்த கேப்டன்சி

ஒவ்வொரு ஐபிஎல் அணியும் தங்களது அணியில் உள்ளூர் வீரர்களை வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கும். ஏனென்றால் அப்போது தான் ரசிகர்களிடையே அதிக பிரபலமாகும். அந்தவகையில் சூர்யகுமார் யாதவ் மும்பையை பூர்விகமாக கொண்டவர். ஆனால் இஷான் கிடையாது. இதுமட்டுமல்லாமல் உள்நாட்டு தொடர்களில் மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் செயல்பட்டுள்ளார். அவரின் கேப்டன்சி திறமைகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐபிஎல்-ல் பெரிதும் உதவும் என்பது 2வது காரணம்.

Recommended Video

Suryakumar Yadav வேண்டாம்.. Shreyas Iyer-ஐ குறிவைக்கும் Mumbai Indians
அறிய பேட்ஸ்மேன்

அறிய பேட்ஸ்மேன்

சூர்யகுமார் யாதவ் ஒரு சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாவார். ஐபிஎல் தொடரில் நல்ல மிடில் ஆர்டர் வீரர் கிடைப்பது சிரமமான ஒன்று. சூர்யகுமாரை இன்று ஏலத்தில் விட்டுவிட்டால் மீண்டும் அவரை ரூ.8 கோடிக்கு அணியில் எடுப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் இஷான் கிஷானோ சிறந்த ஓப்பனிங் வீரர். ஐபிஎல் தொடரில் ஓப்பனிங் வீரர்களுக்கு பஞ்சமே கிடையாது. டிகாக், கிறிஸ் லின் போன்ற வீரர்களுக்கு மாற்றாகவே மும்பை அணியில் ஓப்பனிங் வீரர்கள் இருந்துள்ளனர். இதனால் இஷானை ஏலத்தில் விட்டாலும், நல்ல ஓப்பனரை திரும்ப வாங்கிவிடலாம். இதுதான் 3வது காரணமாகும்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
3 Important reasons behind Mumbai indians retaining Suryakumar Yadav over Ishan Kishan ahead of IPL Auction 2022
Story first published: Wednesday, December 1, 2021, 16:49 [IST]
Other articles published on Dec 1, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X