“ஒட்டுமொத்த ப்ளானும் க்ளோஸ்”.. புதிய அணிகளுக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ.. வீரர்கள் தேர்வில் கட்டுப்பாடு

சென்னை: மெகா ஏலத்திற்கு முன்பாக வீரர்களை ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என புதிய அணிகளுக்கு சலுகைகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தொடரை ஒத்திவைக்க முடிவெடுத்த BCCI.. கோரிக்கை வைக்கும் South Africa

ஐபிஎல் மெகா ஏலத்திற்காக ஏற்கனவே உள்ள 8 அணிகளும் நேற்று தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.

இதில் பெரும் வாரியான அணிகள் அதிகபட்ச எண்ணிக்கையான 4 வீரர்களை அணிக்குள் தக்கவைத்துக்கொண்டது.

கிரிக்கெட்டை பாதித்த ஓமைக்ரான்..இந்திய அணியின் அடுத்த 2 மாத திட்டம் ரத்தாகிறதா? கங்குலி கூறிய தகவல்!கிரிக்கெட்டை பாதித்த ஓமைக்ரான்..இந்திய அணியின் அடுத்த 2 மாத திட்டம் ரத்தாகிறதா? கங்குலி கூறிய தகவல்!

பிசிசிஐ சலுகை

பிசிசிஐ சலுகை

இதனால் தற்போது 2 புதிய அணிகள் தங்களது பணிகளை தொடங்கிவிட்டன. அதாவது ஐபிஎல் தொடரில் புதிதாக இணையவுள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள், மெகா ஏலத்திற்கு முன்பாகவே 3 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ சலுகை கொடுத்திருந்தது. அதில் 2 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு அயல்நாட்டு வீரர் என்ற முறையில் ஒப்பந்தம் செய்துக்கொள்ள வேண்டும்.

புது அணிகள் நடவடிக்கை

புது அணிகள் நடவடிக்கை

அதன்படி நேற்று பழைய அணிகளின் அறிவிப்புகள் வெளியாகிவிட்டதால் இன்று முதல் புதிய அணிகள் வீரர்களிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. இந்நிலையில் புதிய அணிகளுக்கும் முதற்கட்ட வீரர்கள் தேர்வில் எவ்வளவு தொகை செலவிட வேண்டும் என்ற நிபந்தனை கொடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தலா ரூ.90 கோடி வரை செலவு செய்துக்கொள்ளலாம். அதில் முதற்கட்ட தேர்வில் புதிய அணிகள் ரூ.33 கோடி செலவழித்துக் கொள்ளலாம் எனக்கூறப்பட்டு வருகிறது.

எவ்வளவு தொகை

எவ்வளவு தொகை

அதாவது முதன்மை தேர்வாக இருக்கும் வீரருக்கு ரூ. 15 கோடி, 2வது தேர்வு வீரருக்கு ரூ. 12 கோடி மற்றும் 3வது தேர்வுக்கு ரூ. 7 கோடியும் ஊதியமாக நிர்ணயித்துக்கொள்ளலாம். இந்த 33 கோடி ரூபாயில் அணிகள் தங்களுக்கு ஏற்ற வகையில் கூட ஊதியத்தை வழங்கிக்கொள்ளும். அதன்படி பார்த்தால் லக்னோ அணிக்கு பெரும் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.

 லக்னோ அணி திட்டம்

லக்னோ அணி திட்டம்

பஞ்சாப் அணிக்காக விளையாடிவந்த கே.எல்.ராகுல் ரூ.16 கோடி கொடுத்து தக்கவைக்கப்பட்டிருப்பார். ஆனால் லக்னோ அணி ரூ.20 கோடி தர முன்வந்ததால் அங்கிருந்து ராகுல் வெளியேறினார். இதே போல ஐதராபாத் அணி வீரர் ரஷித் கானுக்கு ரூ.16 கோடி ஊதியமாக கொடுப்பதாக கூறியுள்ளதால் அவரும் தனது அணியில் இருந்து வெளியேறி வந்துவிட்டார்.

புதிய சிக்கல்

புதிய சிக்கல்

கே.எல்.ராகுல் மற்றும் ரஷித் கானுக்கு வழங்கப்படுவதாக கூறிய தொகையே மொத்தம் ரூ.36 கோடியாக உள்ளது. எனவே இருவரில் யாரேனும் ஒருவரின் ஊதியத்தை குறைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் யாரேனும் ஒருவரை ஏலத்தில் விட்டு வென்று காட்ட வேண்டும். ராகுல் மற்றும் ரஷித் கான் என இருவரில் யாரை மெகா ஏலத்தில் விட்டாலும், அவர்களை வாங்க அனைத்து அணிகளும் போட்டிப் போட்டுக்கொண்டு வரும் என்பதால் லக்னோ அணிக்கு தான் அதிக செலவுகள் கூட வாய்ப்புள்ளது. இதனால் தற்போது அந்த அணி குழப்பத்தில் உள்ளது. இதே நிலைமை தான் அகமதாபாத் அணிக்கும் உள்ளது. அந்த அணி ஹர்திக் பாண்ட்யா மற்றும் டேவிட் வார்னருக்கு குறி வைத்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
The 8 existing teams for the IPL mega auction yesterday released the list of players they will retain. Restrictions have been imposed on new teams on how much money can be spent to sign initial 3 players
Story first published: Wednesday, December 1, 2021, 15:09 [IST]
Other articles published on Dec 1, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X