For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனிமே ஏதாவது ஒண்ணு தான்.. ஐபிஎல்-ஆ? பாகிஸ்தான் சூப்பர் லீக்-ஆ? முடிவு பண்ணிக்குங்க!

மும்பை : ஐபிஎல் தொடர் துவங்க உள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்களுக்கு பிசிசிஐ புதிய கட்டுப்பாடு விதிப்பது குறித்து விவாதித்து வருகிறது.

புல்வாமா தாக்குதல் எதிரொலியாக இந்தியா - பாகிஸ்தான் இனி கிரிக்கெட் போட்டிகளில் ஆடக் கூடாது என்ற கோரிக்கை எழுந்தது. பிசிசிஐ கிட்டதட்ட அதை ஏற்றுக் கொண்டது போலவே நடந்து வருகிறது.

பிசிசிஐ முடிவு?

பிசிசிஐ முடிவு?

உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறுவதில் இதனால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிசிசிஐ இன்னும் தன் முடிவை அறிவிக்கவில்லை என்றாலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் முடிவு என்ன என்பதை தெரிந்து கொள்ள காத்திருக்கிறது.

பிசிசிஐ கடிதம்

பிசிசிஐ கடிதம்

அதே சமயம், ஐசிசி-க்கு கடிதம் எழுதி தீவிரவாதத்தை வளர்க்கும் நாடுகளுடன் கிரிக்கெட் தொடர்பை துண்டித்துக் கொள்ள வேண்டும் என கேட்டு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், உலகக்கோப்பையில் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு சிக்கல்

பாகிஸ்தானுக்கு சிக்கல்

இது ஒரு புறமிருக்க இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் போல பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு நடத்தி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் தொடருக்கு சிக்கல் ஏற்படுத்த பிசிசிஐ காய் நகர்த்தி வருகிறது.

ஒரு தொடர் மட்டுமே!

ஒரு தொடர் மட்டுமே!

அதன் படி நிர்வாக கமிட்டி கூட்டத்தில் ஐபிஎல் தொடரில் ஆடும் வெளிநாட்டு வீரர்கள் இனி ஐபிஎல் தொடர் அல்லது பிஎஸ்எல் எனப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் இரண்டில் ஒன்றில் மட்டுமே வெளிநாட்டு வீரர்கள் ஆட வேண்டும் என்ற விதியை ஏற்படுத்தலாம் என விவாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

விதி விதிக்க முடியாது

விதி விதிக்க முடியாது

எனினும், இப்படி ஒரு விதியை வீரர்களுக்கு விதிக்க முடியாது காரணம், அணிகள் தான் வீரர்களை ஏலத்தில் போட்டி போட்டுக் கொண்டு வாங்குகின்றன என கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த விவாதம் தற்காலிகமாக முடிவு இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் ஆட முடியாது

இவர்கள் ஆட முடியாது

எனினும், இது குறித்து ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ அழுத்தம் கொடுக்க முடியும். அப்படி அழுத்தம் கொடுத்தால் ஐபிஎல் அணிகள், டிவைன் பிராவோ, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஏபி டி வில்லியர்ஸ் உள்ளிட்ட வீரர்களை தங்கள் அணிகளில் ஆட வைக்க முடியாத நிலை ஏற்படும். மேற்கூறிய வீரர்கள் அனைவரும் பிஎஸ்எல் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறார்கள்.

ஏற்கனவே சிக்கல்

ஏற்கனவே சிக்கல்

முன்னதாக பிஎஸ்எல் தொடரை தயாரித்து, ஒளிபரப்பும் உரிமை பெற்று இருந்த ஐஎம்ஜி ரிலையன்ஸ் நிறுவனம், காஷ்மீர் தாக்குதலை காரணம் காட்டி பாதி தொடரில் விலகிக் கொண்டது குறிப்பிடதக்கது. முன்னதாக பிஎஸ்எல் தொடரை தயாரித்து, ஒளிபரப்பும் உரிமை பெற்று இருந்த ஐஎம்ஜி ரிலையன்ஸ் நிறுவனம், காஷ்மீர் தாக்குதலை காரணம் காட்டி பாதி தொடரில் விலகிக் கொண்டது குறிப்பிடதக்கது.

Story first published: Tuesday, February 26, 2019, 16:34 [IST]
Other articles published on Feb 26, 2019
English summary
IPL or PSL - BCCI planning to give players a choice between two T20 leagues
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X