For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

‘எனக்கே புதுசா இருக்கே’.. மாரடைப்பு என பரவிய தகவல்.. பாக். கிரிக்கெட் ஜாம்பவான் அதிர்ச்சி!

லாகூர்: பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக், தனக்கு மாரடைப்பு என்று பரவிய செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் அக். இவர் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

சர்வதேச அளவில் 3 வடிவ கிரிக்கெட்டிலும் பாகிஸ்தான் அணிக்காக அதிக ரன்களை குவித்தவர்களின் பட்டியலில் இன்சமாமும் டாப் இடங்களில் இருந்தவர் ஆவார்.

ஆர்சிபி அடுத்த கேப்டன் பொல்லார்ட்?.. ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவு.. அதிர்ச்சியில் மும்பை ரசிகர்கள்ஆர்சிபி அடுத்த கேப்டன் பொல்லார்ட்?.. ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவு.. அதிர்ச்சியில் மும்பை ரசிகர்கள்

மாரடைப்பு

மாரடைப்பு

இப்படிபட்ட புகழ்மிக்க இன்சமாம் உல் ஹக்கின் உடல் நிலை குறித்து நேற்று அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியானது. அதாவது இன்சமாமிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கும் சூழலுக்கு சென்றார். இதனையடுத்து அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கடைசி கட்டத்தில் சிகிச்சைப் பார்க்கப்பட்டது எனக்கூறப்பட்டது.

3 நாட்கள் அவதி

3 நாட்கள் அவதி

மேலும் கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ந்து 3 நாட்களாக லேசான நெஞ்சு வலி இருந்து வந்ததாகவும், இதனையடுத்து அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி (angioplasty) சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டது. இந்த செய்தியை அறிந்த கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்காக ட்வீட்களை போட்டு வந்தனர். மேலும் பிரார்த்தனைகளையும் மேற்கொண்டு வந்தனர்.

 புதிய வீடியோ

புதிய வீடியோ

இந்நிலையில் தனது உடல்நிலை குறித்த தகவல் அனைத்தும் வதந்தி என்றும் மாரடைப்பு என்று வெளியானது பொய்யான தகவல் என்றும் இன்சமாம் உல் ஹக்கே தெரிவித்துள்ளார். இதுகுறித்து Inzamam ul Haq - The Match Winner என்ற தனது யூடியூப் சேனலில் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர், உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள ரசிகர்கள் எனக்காகப் பிரார்த்தனை செய்தீர்கள். உலகில் உள்ள பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் நான் பூரண குணம் பெற வேண்டி வாழ்த்துக் கூறினீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி.

உண்மையான காரணம்

உண்மையான காரணம்

ஆனால் எனக்கு ஒன்றும் ஆகவில்லை. மாரடைப்பு ஏற்பட்டதாகத் வெளியான தகவல்கள் உண்மை அல்ல. நான் எனது வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனை சென்றேன். அங்கே எனக்கு ஆஞ்சியோகிராஃபி பரிசோதனை செய்தனர். அதில் என் இதயத்துக்குச் செல்லும் ஒரு ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பதாகக் கூறினர். அதனால் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. அடுத்த 12 மணி நேரத்தில் வீடு திரும்பிவிட்டேன். தற்போது நலமுடன் இருக்கிறேன். எனவே யாரும் கவலை கொள்ள வேண்டாம் எனக்கேட்டுக்கொண்டுள்ளார்.

Story first published: Wednesday, September 29, 2021, 19:13 [IST]
Other articles published on Sep 29, 2021
English summary
Pakistan former Captain Inzamam-ul-Haq Refuses the news that, he suffer heart attack
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X