கிரிக்கெட்னா பவுலிங் வரும்.. பேட்டிங் வரும்..பாம்புமா வரும்..ரஞ்சிப் போட்டியில் ரகளை செய்த "நாகராஜா"

Snake delays start of Andhra Vidarbha Ranji trophy match

விஜயவாடா : ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஆந்திரா மற்றும் விதர்பா அணிகளுக்கிடையில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை குரூப் ஏவிற்கான போட்டியின் முதல்நாள் ஆட்டம் மைதானத்தில் புகுந்த பாம்பால் தாமதமானது.

போட்டி துவங்குவதற்கு முன்பாக மைதானத்தில் நுழைந்த பாம்பு சரசரவென அங்கும் இங்கும் ஜோராக வலம்வந்தது. இதையடுத்து சிறிது நேர தாமதத்திற்கு பின்பு போட்டி மீண்டும் துவங்கியது.

பாம்பு இங்கும் அங்கும் போகும் வீடியோ பிசிசிஐயின் உள்நாட்டு டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. பாம்பினால் மைதானத்தில் வீரர்கள் பதற்றம் அடைந்தனர்.

 ஆந்திரா -விதர்பா அணிகள் மோதல்

ஆந்திரா -விதர்பா அணிகள் மோதல்

இந்தியாவில் விளையாடப்படும் ரஞ்சி கோப்பைக்கான போட்டிகள் மிகவும் முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றன. இந்த போட்டிகளின் மூலம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பு சாத்தியமாகின்றது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஆந்திரா மற்றும் விதர்பா அணிகள் மோதிய ரஞ்சி கோப்பையின் குரூப் ஏ போட்டி துவங்கியது.

 3வது முறையாக கோப்பையில் கவனம்

3வது முறையாக கோப்பையில் கவனம்

இந்த போட்டியில் ஆந்திரா மற்றும் விதர்பா அணிகள் மோதிய நிலையில், விதர்பா அணியின் கேப்டன் பைஸ் பைசல் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இவர் மூன்றாவது முறையாக கோப்பையை கைபற்றும் முனைப்பில் உள்ளார். ஆயினும் ஆந்திர அணி, விதர்பாவிற்கு கடுமையான போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 தாமதமான போட்டி

தாமதமான போட்டி

போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே மைதானத்திற்கு பாம்பு நுழைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாம்பு அங்கும் இங்கும் சென்ற நிலையில், இதனால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

பிசிசிஐ உள்நாட்டு டிவிட்டரில் பகிர்வு

அங்கும் இங்கும் சென்ற பாம்பால் வீரர்கள் பதற்றம் அடைந்தனர். இதனிடையே, பாம்பு குறித்த இந்த விடியோ பிசிசிஐ உள்நாட்டு டிவிட்டரில் பகிரப்பட்டது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Snake stops play of Ranji Trophy between Vidarbha and Andhra team
Story first published: Tuesday, December 10, 2019, 11:31 [IST]
Other articles published on Dec 10, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X