ரத்தாகும் நிலையில் இந்தியா - தென்னாப்பிரிக்க டி20 போட்டி.. பிசிசிஐ போட்ட அவசர மீட்டிங்.. காரணம் என்ன

மும்பை: இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் டி20 போட்டி நடைபெறுவதில் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது.

India vs South Africa | BCCI எடுத்த முடிவு | SA Cricketer-க்கு நேர்ந்த கொடுமை | #Cricket

வரும் ஜூன் 9ம் தேதியன்று தொடங்கும் இந்த தொடர் ஜூன் 19ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதற்காக தென்னாப்பிரிக்க வீரர்கள் இந்தியா வந்துவிட்டனர்.

இந்தியா - பாகிஸ்தான் தொடர்.. இரு அணி வீரர்களின் பெரும் ஆசை அதுதான்.. பாக். வீரர் வெளிப்படை பேச்சு! இந்தியா - பாகிஸ்தான் தொடர்.. இரு அணி வீரர்களின் பெரும் ஆசை அதுதான்.. பாக். வீரர் வெளிப்படை பேச்சு!

தென்னாப்பிரிக்க டி20 தொடர்

தென்னாப்பிரிக்க டி20 தொடர்

இந்திய அணி தரப்பில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. ஐபிஎல் கே.எல்.ராகுல் தலைமையிலான அணியில் ஐபிஎல் தொடரில் கலக்கிய வீரர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து வீரர்களும் பெங்களுரூ தேசிய அகாடமியில் பயிற்சிகாக வந்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த தொடரில் தற்போது ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

புது பிரச்சினை

புது பிரச்சினை

இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி 12-ஆம் தேதி கட்டாக் நகரில் நடைபெறுகிறது. கட்டாக் மைதானத்தில் 44,000 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வசதிகள் உள்ளது. ஆனால் முழு அளவிலான ரசிகர்களுக்கு ஏற்ற பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு வசதிகள் இல்லை எனக்கூறப்படுகிறது.

இதனால் ஒடிசாவை சேர்ந்த சஞ்சய் நாயக் என்பவர் ஆனந்த்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வழக்குப்பதிவு என்ன

வழக்குப்பதிவு என்ன

பிசிசிஐ மற்றும் ஒடிஷா கிரிக்கெட் வாரியம் ஆகிய இரண்டு நிர்வாகங்களின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இதற்காக பிசிசிஐ-ம் தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகின்றன.

இறுதி முடிவு என்ன

இறுதி முடிவு என்ன

2வது டி20 போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்துமே வெகு சீக்கிரமாக விற்றுத் தீர்ந்துவிட்டன. அனைவரும் எதிர்நோக்கியுள்ள சூழலில் 2வது போட்டியை பிசிசிஐ அதிகாரிகள் ஒத்திவைக்கப் போகின்றனரா? அல்லது வேறு மைதானத்திற்கு போட்டியை மாற்றி அமைக்க போகின்றனரா? என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
BCCI arranged the meeting after India vs South africa 2nd t20 match in Trouble
Story first published: Saturday, June 4, 2022, 19:36 [IST]
Other articles published on Jun 4, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X