For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலி காயம் என்னாச்சு? உலகக்கோப்பையில் ஆடுவாரா? கசிந்த தகவல்.. பரபரப்பில் ரசிகர்கள்

Recommended Video

உலகக்கோப்பையில் ஆடுவாரா? கசிந்த தகவல்.. பரபரப்பில் ரசிகர்கள்

லண்டன் : உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

இந்த நிலையில், விராட் கோலியின் காயம் குறித்து இந்திய அணி வட்டாரத்தில் இருந்து நல்லவிதமாக தகவல்கள் வந்துள்ளன.

இந்திய அணி 2019 உலகக்கோப்பை தொடரில் ஜூன் 6 அன்று தன் முதல் லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்தப் போட்டிக்கான தீவிர பயிற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல் உதவி

முதல் உதவி

கேப்டன் விராட் கோலியும் பயற்சியில் ஈடுபட்டார், அப்போது அவரது வலது கை கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது. உடனே ஐஸில் விரலை வைத்தும், டேப் ஒட்டியும் அவருக்கு முதல் உதவி வழங்கப்பட்டது.

வதந்தி

வதந்தி

தொடர்ந்து மேஜிக் ஸ்பிரே எனப்படும் வலி நிவாரணியும் கோலிக்கு அளிக்கப்பட்டது. இது தொடர்பான செய்திகள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாக பரவியது. சிலர் விராட் கோலி இந்திய அணியின் முதல் உலகக்கோப்பை லீக் போட்டியில் விளையாட மாட்டார் என்றும் கூறினர்.

நன்றாக இருக்கிறார்

நன்றாக இருக்கிறார்

இந்த நிலையில், விராட் கோலியின் காயம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய அணி வட்டாரத்தில் இருந்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு வந்துள்ள தகவலின்படி, விராட் கோலிக்கு பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை. அவர் நன்றாக இருக்கிறார் என கூறப்படுகிறது.

அதிகாரப்பூர்வ தகவல் இல்லை

அதிகாரப்பூர்வ தகவல் இல்லை

எனினும், விராட் கோலி காயம் குறித்து பிசிசிஐ-யிடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளிவரவில்லை. ஒருவேளை விராட் கோலியின் காயம் பெரிதாக இருக்கும் பட்சத்தில் அவர் இடத்தில் யார் விளையாடுவார்கள் என்ற யூகங்கள் இணையத்தில் இறக்கை கட்டி பறக்கிறது.

பின்னடைவு

பின்னடைவு

ஜூன் 6 அன்று நடக்க உள்ள லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக விராட் கோலி பங்கேற்பார் என்பதே தற்போதைய நிலைமை. தென்னாப்பிரிக்கா அணி வலுவான அணிகளில் ஒன்றாக கருதப்படும் நிலையில், விராட் கோலி இல்லாமல் ஆடினால், இந்தியாவுக்கு நிச்சயம் அது பின்னடைவு தான்.

காயம்

காயம்

ஏற்கனவே, இந்திய அணியில் விஜய் ஷங்கர் காயத்தில் இருந்து சமீபத்தில் தான் மீண்டார். கேதார் ஜாதவ் ஐபிஎல் தொடர் முதல் காயத்தோடு இருக்கிறார். உலகக்கோப்பை தொடருக்காக அவர் இந்திய அணியுடன் இணைந்து இருந்தாலும், போட்டிகளில் களமிறங்க வாய்ப்பில்லை என்பதே உண்மை. இந்த நிலையில், கேப்டன் விராட் கோலியும் காயமடைந்து இருப்பது ரசிகர்களுக்கு கவலை அளித்துள்ளது.

Story first published: Sunday, June 2, 2019, 17:41 [IST]
Other articles published on Jun 2, 2019
English summary
Cricket World cup 2019 : Virat Kohli Injury Update - Nothing to worry, says reports
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X