போட்டியின் போது இப்படி ஒரு செயலா... நெகிழ்ச்சியூட்டும் ரோக்கித் சர்மாவின் சமூக அக்கறை.. விவரம்!

சென்னை: இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் ரோகித் சர்மா ஆட்டத்தை தாண்டி செய்து வரும் வித்தியாசமான செயல் ஒன்று பாராட்டப்பட்டு வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக மும்பை அணியை வழிநடத்தும் ரோகித் சர்மா திகழ்ந்து வருகிறார்.

முக்கிய வீரரை தூக்கியடித்த கோலி.. டாஸ் வென்ற பெங்களூர்.. கொல்கத்தாவிற்கு எதிராக முதலில் பேட்டிங்!

இவரின் தலைமையில் 5 முறை கோப்பை வென்றுள்ள மும்பை அணி இந்தாண்டும் கோப்பையை வென்று ஹாட்ரிக் அடிக்க வேண்டும் என மும்முரமாக உள்ளது.

கவனம் ஈர்த்த ரோகித்

கவனம் ஈர்த்த ரோகித்

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை 2ல் வெற்றி ஒன்றில் தோல்வியும் பெற்றுள்ளது. இந்த போட்டிகளை தாண்டி ரோகித் சர்மாவின் ஷூ தனி கவனம் பெற்று வருகிறது. இயற்கை பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கும் விதமாக தனது ஷூவில் வித்தியாசமான புகைப்படங்களை அச்சிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

காண்டா மிருகம்

காண்டா மிருகம்

பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டியின் போது, உலகில் காண்டா மிருகங்கள் அழிவதை தடுத்து அவற்றை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘ Save Rhinos' என அச்சிட்டு இருந்த ஷூ-வை பயன்படுத்தி விளையாடினார். அதே போல கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற 2வது போட்டியில், கடலில் ப்ளாஸ்டிக் கழிவுகள் கலப்பதை தடுக்க வலியுறுத்தி ‘Plastic Free Ocean' என அச்சிட்டிருந்த ஷூ-வை அணிந்துக்கொண்டு விளையாடினார்.

கடற்திட்டுக்கள்

கடற்திட்டுக்கள்

இந்நிலையில் நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கடலில் உள்ள பவளப்பாறைகளையும், கடற் திட்டுகளையும் முக்கியம் என கூறும் வகையில் 'Save Corals' என அச்சிடப்பட்டிருந்த ஷூவை அணிந்து விளையாடினார்.

ரசிகர்களுக்கு வலியுறுத்தல்

ரசிகர்களுக்கு வலியுறுத்தல்

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ரோகித் சர்மா, கடற்திட்டுக்கள் தான் கடலுக்கு மிகவும் இதயம் மற்றும் உயிர் போன்றது. கடல் மீது எனக்குள்ள ஆசையை வார்தைகளால் கூற முடியாது. கடலானது மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு பெரும் உதவியாக உள்ளது. அப்படிப்பட்ட கடலை நாம் பாதுகாக்க வேண்டும். கடலை நாம் பாதுகாத்தால் நமது எதிர்காலத்தை பாதுகாக்கலாம் என தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Rohit Sharma Uses His Shoes To Highlight the Natural Issues to create awarness
Story first published: Sunday, April 18, 2021, 16:20 [IST]
Other articles published on Apr 18, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X