For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஓய்வா ?? பி.சி.சி.ஐ. அகராதியில் இல்லாத வார்த்தை குமுறும் சீனியர்கள்..

கதிவரனுக்கு கூட ஒய்வு உண்டு, வீசும் தென்றலுக்கு கூட ஓய்வு உண்டு.. தொழிற்சாலைகளில் இயங்கும் இயந்திரங்களுக்கு கூட ஓய்வு உண்டு..

Recommended Video

India vs Pakistan T20 தொடரை நடத்த திட்டமிடும் அமீரகம்.. BCCI-யிடம் பேச்சுவார்த்தை

ஆனால், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அப்படி ஒன்றே இல்லை. ஓய்வு என்ற ஒரு வார்த்தையே பி.சி.சி.ஐ. அகராதியில் இல்லை..

3 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு உண்மையான “பிகில்” அணிக்கு அங்கீகாரம்..!!3 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு உண்மையான “பிகில்” அணிக்கு அங்கீகாரம்..!!

கடந்த 6 மாதங்களாக இந்திய கிரிக்கெட் அணி ஓய்வின்றி விளையாடி வருகிறது. சரி இப்போதாவது ஓய்வு தருவார்கள் என பார்த்தால் இப்போது மயங்கும் வீரர்களை தண்ணீரை தெளித்து மீண்டும் அடிக்க தொடங்கிவிட்டது பி.சி.சி.ஐ.

தென்னாப்பிரிக்கா தொடர்

தென்னாப்பிரிக்கா தொடர்

இந்தியா, நியூசிலாந்துக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 7ஆம் தேதி முடிவடைகிறது. மறுநாளே இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 17ஆம் தேதியே தென்னாப்பிரிக்காவுடன் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இடையில் இருக்கும் ஒரு வாரத்தில் 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளையாடுகிறது. இந்த தொடர் கிட்டத்தட்ட 45 நாட்கள் நீடிக்கிறது

ஓய்வின்றி தொடர்

ஓய்வின்றி தொடர்

தென்னாப்பிரிக்கா தொடர் முடிந்த 10 நாட்களில் மேற்கிந்தியத் தீவுகளுடன் பிப்ரவரி மாதம் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது இந்தியா.அந்த தொடர் முடிந்த 4 நாட்களில் இலங்கையுடன் இந்தியா விளையாடுகிறது. அடுத்த 10 நாட்களில் மீண்டும் ஐ.பி.எல். போட்டி, ஜூன் மாதம் தென்னாப்பிரிக்கா தொடர், ஜூலை மாதம் மீண்டும் இங்கிலாந்து பயணம் என கேட்கவே தலை சுற்றுகிறது. இப்படி கடந்த ஒரு வருடத்தில் மூச்சு விடவே நேரமில்லாமல் இந்திய அணி விளையாட உள்ளது

காயம்

காயம்

இப்படி ஓய்வின்றி விளையாடினால், இந்திய வீரர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படும். உதாரணமாக நல்ல உடல் தகுதியுடன் இருந்த கே.எல். ராகுல், தொடர்ந்து 6 மாதங்களாக விளையாடி வந்தார். தற்போது காயம் ஏற்பட்டதால் முக்கியமான தென்னாப்பிரிக்க தொடரை அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்று மற்ற வீரர்களுக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மாற்று வழி

மாற்று வழி

தொடர்ந்து தொடரை பி.சி.சி.ஐ. நடத்துவதால் வீரர்களை பாதுகாக்க ஒரே வழி தான் உள்ளது. டெஸ்ட் அணிக்கு என தனி வீரர்கள், ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கு என தனி வீரர்களை உருவாக்குவது தான் ஒரே வழி. இல்லையெனில் இங்கிலாந்தை போல், வீரர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வு வழங்கி அணியில் விளையாட வைக்க வேண்டும். தற்போது பும்ரா, முகமது ஷமிக்கு மட்டும் தான் நியூசிலாந்து தொடர் முழுவதும் ஓய்வு வழங்கப்பட்டது.அதே போல் மற்ற சீனியர்களுக்கும் ஓய்வு வழங்கி இருக்க வேண்டும்.

Story first published: Wednesday, November 24, 2021, 21:28 [IST]
Other articles published on Nov 24, 2021
English summary
No Rest For Indian cricket Team Players. BCCI Organising series for Players with out any rest
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X