For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மறந்துவிடுங்க ! அகமதாபாத்தில் கண்டிப்பாக அதை எதிர்பார்க்காதீங்க.. வசீம் ஜாபர் கொடுத்த எச்சரிக்கை

மும்பை : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியை வெல்லும் அணி தொடரை வென்றுவிடும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்திய அணி 2019ஆம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் தொடர்ந்து டி20 தொடரை வென்று வருகிறது. நியூசிலாந்தை பொறுத்தவரை கடைசியாக 2012ஆம் ஆண்டு இந்தியாவில் ஒரே ஒரு டி20 போட்டி கொண்ட தொடரை வென்றது.

அதை தவிர, எந்த வகையிலான கிரிக்கெட் போட்டியிலும் நியூசிலாந்து அணி இந்தியாவில் வெற்றி பெற்றது இல்லை.

ரொம்ப சந்தோஷப்படாதீங்க.. அதிர்ஷ்டத்தால் நியூசி,யை இந்தியா வீழ்த்தியதா??.. பாக். சீனியர் விளாசல்! ரொம்ப சந்தோஷப்படாதீங்க.. அதிர்ஷ்டத்தால் நியூசி,யை இந்தியா வீழ்த்தியதா??.. பாக். சீனியர் விளாசல்!

ஆடுகளம்

ஆடுகளம்

அகமதாபாத் ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருந்தாலும், டாஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. இதுவரை இங்கு நடைபெற்ற 6 டி20 போட்டியில் 3 முறை டாஸ் வென்று முதலில் பேட் செய்த அணியும், 3 முறை முதலில் பந்துவீச்சு செய்த அணிகளுமே வென்று இருப்பது இதற்கு உதாரணம்.

 ராசியான ஆடுகளம்

ராசியான ஆடுகளம்

இதே போன்று சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அகமதாபத்தில் இந்தியா இதுவரை 6 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் 4 போட்டியில் வெற்றி, இரண்டில் தோல்வியை தழுவி உள்ளது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய வசீம் ஜாபர், நியூசிலாந்துக்கு எதிரான முதல் இரணடு டி20 போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் போல் அகமதாபாத்தில் இருக்காது.

நல்ல வாய்ப்பு

நல்ல வாய்ப்பு

அகமதாபாத் ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும். இன்றைய ஆட்டத்தில் 170 ரன்களுக்கு மேல் அணி வீரர்கள் அடிப்பார்கள் என்று நினைக்கிறேன். இதனால் இந்திய அணியின் சுப்மன் கில், இஷான் கிஷன் மற்றும் ராகுல் திரிபாதி ஆகிய 3 வீரர்களும் ரன்குவித்து தங்களுடைய பார்முக்கு திரும்ப நல்ல வாய்ப்பு.

அறிவுரை

அறிவுரை

நான் சொல்லி கொள்வது எல்லாம், கடந்த 2 போட்டியில் விளையாடிய விதத்தை மறந்து விடுங்கள். இந்தப் போட்டியை புதிய தொடக்கமாக எடுத்து கொண்டு அதிரடியாக விளையாடுங்கள். 2 போட்டியில் சரியாக விளையாடவில்லை என்று நினைத்து கொண்டே பேட்டிங் செய்தால் அழுத்தமும், நெருக்கடியும் தான் ஏற்படும்.

Story first published: Wednesday, February 1, 2023, 17:29 [IST]
Other articles published on Feb 1, 2023
English summary
Wasim jaffer advice to indian top order batsmans vs NZ in 3rd t20
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X