For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

லார்ட்ஸில் கூடுதல் பேட்ஸ்மேன் தேவையா.. கவாஸ்கர் யோசனை குறித்து பௌலிங் கோச் கருத்து

By Aravinthan R

லண்டன் : இந்திய அணியின் முதல் டெஸ்ட் தோல்விக்குப் பின் அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் கூறிய பல அறிவுரைகளில் ஒன்று, பந்துவீச்சாளர் உமேஷ் யாதவுக்கு பதில் கூடுதல் பேட்ஸ்மேனாக புஜாராவை இந்திய அணியில் ஆட வைக்க வேண்டும் என்பது ஆகும்.

இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் கூடுதல் பேட்ஸ்மேன் யோசனை குறித்து பேசும்போது, “பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் அது ஒரு பழமைவாத நகர்வு” என குறிப்பிட்டார்.

bowling coach feels playing an extra batsman is a conservative move


இந்திய அணி இங்கிலாந்தில் நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டியில் புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் ஆட உள்ளது. இந்த போட்டியில் வென்று தங்கள் மீது வைக்கப்படும் விமர்சனத்துக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள், இந்திய வீரர்கள். குறிப்பாக, இந்திய பேட்ஸ்மேன்கள்.

இந்த நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண், அணி மீது வைக்கப்பட்ட சில விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார். அணியில் கூடுதல் பேட்ஸ்மேன் என்ற யோசனை பற்றி பேசியபோது, “லார்ட்ஸ் மைதானத்தில் கூடுதல் பேட்ஸ்மேன் ஆட வைப்பது பழமைவாத நகர்வாகத்தான் நான் கருதுவேன். அனைத்தும் சூழ்நிலையை சார்ந்து இருப்பதாகவே நான் கருதுகிறேன். மேலும், அவை முதல் டெஸ்ட் போல சாதகமாக இருக்காது. ஐந்து பந்துவீச்சாளர்களுடன் ஆடுவது தான் அர்த்தமுள்ளதாக இருக்கும்” என தெரிவித்தார்.

இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்விங் பந்துகளை ஆடும் போது காலை முன்பக்கம் வைத்து பந்தை தள்ளுகிறார்கள் (Front Foot Defense and Push). இது சரியான முறை அல்ல என சிலர் கருத்து கூறினர். ஆனால், இந்த கருத்தையும் மறுக்கும் வகையில் பேசியிருக்கிறார், பாரத் அருண். அவர் கூறுகையில், “பிர்மிங்ஹாம் டெஸ்டிலும், பயிற்சியிலும் அவர்கள் அதிகம் இந்த முறையில் ஆடினார்கள். கிரீஸுக்கு பின்னே நிற்பதை விட, இப்படி (முன்னேறி) ஆடுவதால் (பந்தை அடிக்க) அதிக வழிகள் கிடைக்கிறது என கருதுகிறார்கள்” என்றார்.

முதல் டெஸ்டில் திறமையை காட்டாத உமேஷ் யாதவையும், அதிகம் பந்து வீசாத ஹர்திக் பண்டியாவையும் ஆதரித்து பேசினார், அருண். இவரது கருத்துப்படி பார்த்தால் இன்று தொடங்க உள்ள இரண்டாவது டெஸ்டில் ஐந்து பந்துவீச்சாளர்கள் களமிறங்குவது உறுதி என தெரிகிறது.





Story first published: Thursday, August 9, 2018, 10:59 [IST]
Other articles published on Aug 9, 2018
English summary
Indian team Bowling coach Bharat Arun feels playing an extra batsman is a conservative move.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X