For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

KXIP vs MI: 300 சிக்சர்கள்... மரண மாஸ்... ! யாரும் தொட முடியாத புதிய சாதனை படைத்த கெய்ல்

மொகாலி:மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசிய கெய்ல் ஐபிஎல் வரலாற்றில் 300 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மொகாலியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பஞ்சாப் அணிகளும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப், மும்பையை பேட் செய்ய அழைத்தது.

அந்த அணியின் தொடக்க வீரர்களாக ரோகித்தும், டி காக்கும் களம் இறங்கினர். இருவரும் அணிக்கு அருமையான தொடக்கம் அமைத்து கொடுத்தனர்.

KXIP vs MI:பஞ்சாப் அணிக்கு 177 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை... கெயில் சூறாவளி கலக்குமா? KXIP vs MI:பஞ்சாப் அணிக்கு 177 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை... கெயில் சூறாவளி கலக்குமா?

176 ரன்கள் குவிப்பு

176 ரன்கள் குவிப்பு

இடையிடையே விக்கெட்டுகள் விழுந்தாலும் ஒரு பக்கம் ரன்கள் வந்து கொண்டு தான் இருந்தன. 200 ரன்களை எட்டிவிடலாம் என்று கணக்கு போட்ட மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது.

பஞ்சாப் ஆட்டம்

பஞ்சாப் ஆட்டம்

அதிகபட்சமாக தொடக்க வீரர் டி காக் 60 ரன்கள் குவித்தார். ரோகித் 32 ரன்களும், பாண்டியா 31 ரன்களும் குவித்தனர். இதையடுத்து 177 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பஞ்சாப் ஆடியது.

பவுண்டரி அடித்த கெய்ல்

பவுண்டரி அடித்த கெய்ல்

அந்த அணியின் தொடக்க வீரர்களாக சிக்சர் மன்னன் கெய்ல், ராகுல் ஆகியோர் களமிறங்கினர். மெதுவாக பந்துகளை எதிர் கொண்ட கெய்ல் பவுண்டரியுடன் தான் தமது ரன் கணக்கை ஆரம்பித்தார்.

புதிய சாதனை

புதிய சாதனை

3வது ஓவரில் அவர் அடுத்ததடுத்து அடித்த 2 சிக்சர்கள் அருமை. அந்த 2 சிக்சர்கள் மூலம் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையை ஏற்படுத்தி இருக்கிறார் கெய்ல்.

300 சிக்சர்கள்

300 சிக்சர்கள்

மொத்தம் 300 சிக்சர்களை அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையையும், பெருமையையும் அவர் பெற்றிருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் டி வில்லியர்ஸ் இருக்கிறார். அவர் 193 ரன்களை அடித்திருக்கிறார்.

3வது இடத்தில் தோனி

3வது இடத்தில் தோனி

3வது இடத்தில் தல தோனி இருக்கிறார். அவர் 187 சிக்சர்களை தமது பட்டியலில் வைத்திருக்கிறார். பொதுவாக கெய்ல் மீது சில விமர்சனங்கள் வைக்கப்படுவது உண்டு. களத்தில் ரன்களை ஓடி எடுக்கமாட்டார்.. பவுண்டரிகளாகவும், சிக்சர்களாகவுமே எடுப்பார் என்று குற்றச்சாட்டு இருக்கிறது.

குவியும் வாழ்த்துகள்

குவியும் வாழ்த்துகள்

அது ஒரு பக்கம் இருந்தாலும் முதல் முறையாக ஐபிஎல் தொடர் இதுவரை யாரும் நெருங்க முடியாத சாதனையை இந்த போட்டியின் வழியாக கெய்ல் படைத்திருக்கிறார். அவருக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Saturday, March 30, 2019, 20:30 [IST]
Other articles published on Mar 30, 2019
English summary
Chris Gayle 1st batsman to hit 300 sixes in IPL history.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X