For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுக்கு பேரு அம்பயரிங்கா??.. ஹர்திக் பாண்ட்யா-க்கு வந்த மோசமான நிலை.. கொந்தளித்த ரசிகர்கள்!

ஐதராபாத்: நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு அம்பயர்கள் அவுட் கொடுக்கப்பட்ட விதம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நியாயமே கிடையாது என ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் ஓப்பனர்கள் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் மீண்டும் ஒருசிறப்பான அடிதளத்தை அமைத்தனர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 60 ரன்களை சேர்த்தது.

எதிர்பார்த்த அனைத்தும் நிறைவேறும்.. இந்தியா - நியூசிலாந்து முதல் ODI.. பிட்ச்-ல் உள்ள சூப்பர் அம்சம்எதிர்பார்த்த அனைத்தும் நிறைவேறும்.. இந்தியா - நியூசிலாந்து முதல் ODI.. பிட்ச்-ல் உள்ள சூப்பர் அம்சம்

முக்கிய பார்ட்னர்ஷிப்

முக்கிய பார்ட்னர்ஷிப்

அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 34 ரன்களை அடித்து துரதிஷ்டவசமாக அவுட்டாகி சென்றார். மறுமுணையில் தூண் போல சுப்மன் கில் நிலைத்து நின்று விளையாட விராட் கோலி (8), இஷான் கிஷான் (5) போன்ற முன்னணி வீரர்கள் உறுதுணையாக நிற்காமல் சென்றனர். அப்போது வந்த துணைக்கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கில்லுடன் சேர்ந்து 74 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தார்.

புதிய சர்ச்சை

புதிய சர்ச்சை

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவை தவறான முடிவால் விக்கெட்டாக்கி அனுப்பியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆட்டத்தின் 40வது ஓவரின் போது டேரில் மிட்செல் வீசிய பந்தை ஹர்திக் பாண்ட்யா ஸ்ட்ரோக் வைக்க முயன்று தவறவிட்டார். அப்போது உள்ளே சென்ற பந்து ஸ்டம்ப்களில் பட்டது எனக்கூறி நியூசிலாந்து அணி அவுட் கோரியது. ஆனால் அதில் உறுதியாக இல்லாத அம்பயர் 3வது நடுவருக்கு பரிந்துரைத்தார்.

ரிவ்யூவ் காட்சிகள்

ரிவ்யூவ் காட்சிகள்

3வது நடுவர் ரிவ்யூவ் செய்து பார்த்த போது, பந்துகள் ஸ்டம்புகளுக்கு மேலே சென்றது. அது விக்கெட் கீப்பரின் கைகளுக்குள் சென்றுவிட்ட போதும் கூட ஸ்டம்புகளில் விளக்குகள் எறியவில்லை. ஆனால் கீப்பர் டாம் லேதமின் க்ளவுஸ் லேசாக உரசி விளக்குகள் எறிந்தது போல தான் காட்சிகளில் இருந்தன. இதனை 3வது நடுவரும் கூறிக்கொண்டே தான் இருந்தார்.

இறுதியில் ட்விஸ்ட்

இறுதியில் ட்விஸ்ட்

ஆனால் இறுதியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவுட் என முடிவுகொடுத்தார். இதனால் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். ஒரு பந்து ஸ்டம்புகளில் பட்டும் விளக்கு எறியாமல் பெயில்கள் கீழே விழாமல் இருந்தால் நாட் அவுட் கொடுக்கிறீர்கள். ஆனால் இன்று பந்து ஸ்டம்புகளுக்கு மேல் சென்றுள்ளது, விளக்குகள் எறியவே இல்லை. இதற்கு எதற்கு அவுட் என விளாசி வருகின்றனர்.

Story first published: Wednesday, January 18, 2023, 18:08 [IST]
Other articles published on Jan 18, 2023
English summary
Cricket Fans Slamming Umpires decision on Hardik pandya's wicket in India vs New Zealand 1st ODI, here is the full details
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X