For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கொடுத்திருக்க கூடாது.. ஒரு மாற்றத்தை செய்யுங்கள்.. கம்பீர் அட்வைஸ்

டெல்லி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக்கிற்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்திருக்க கூடாது என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக அதிரடியாக விளையாடி இந்திய அணியில் 3 ஆண்டுகளுக்கு பிறகு இடம்பிடித்தவர் தினேஷ் கார்த்திக்.

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் - 3 ஒருநாள், 5 டி20 போட்டி கொண்ட தொடர்.. அட்டவணை வெளியீடுஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் - 3 ஒருநாள், 5 டி20 போட்டி கொண்ட தொடர்.. அட்டவணை வெளியீடு

முதல் போட்டியில் கார்த்திக் களத்துக்கு வந்த போது ரசிகர்கள் DK.. DK. என்று கத்தினர். ஆனால் கார்த்திக் 2 பந்துகள் மட்டுமே பிடித்து ஒரு ரன் மட்டுமே அடித்தார்.

கார்த்திக்கிற்கு ஏன் வாய்ப்பு?

கார்த்திக்கிற்கு ஏன் வாய்ப்பு?

தமிழக கிரிக்கெட் வீரருக்கு ரசிகர்கள் கொடுத்த அன்பு, சில பேருக்கு பிடித்திருக்காது போலும். இந்த நிலையில், இந்திய அணியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி எம்.பி.யும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர், இந்திய அணி தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கொடுத்து தவறு செய்துவிட்டது. தினேஷ் கார்த்திக்கிற்கு பதில் தீபக் ஹூடாவை அணியில் சேர்த்து இருக்கலாம்.

தீபக் ஹூடா

தீபக் ஹூடா

தீபக் ஹூடா இளம் வீரர், அதிரடியாக ஆடக் கூடியவர் சுழற்பந்தும் வீச தெரியும். அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். ஆனால், அந்த வாய்ப்பை இந்தியா வீணடித்துவிட்டது. தற்போது முதல் போட்டியில் விளையாடிய அணியை வைத்து தான் அடுத்த 2 போட்டிகளையும் சந்திக்க வேண்டும். காரணம், அணியை அடுக்கடி மாற்றினால், உலக கோப்பைக்கான அணியை தயார் படுத்த முடியாது.

ரவி பிஸ்னாய்

ரவி பிஸ்னாய்

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா உள்ளதால் அவரை 3வது வேகப்பந்துவீச்சாளராக பயன்படுத்த வேண்டும். அப்போது, ஒரு வேகப்பந்துவீச்சாளருக்கு பதில் ரவி பிஸ்னாய் உள்ளிட்ட வீரர்களை வைத்து இந்திய அணி அட்டாக் செய்யலாம். சாஹல், பிஸ்னாய் என இருவரும் பிளேயிங் லெவனில் இருந்தால், அது எதிரணிக்கு நெருக்கடியை தரும்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

முதல் போட்டியில் நமது பவுலர்கள் சொதப்பினர். ஆனால் என்றாவத இப்படி நடப்பதில் தவறு இல்லை. அடுத்த போட்டியில் பந்துவீச்சாளர்களை எப்படி பந்தவீச வேண்டும். எப்போது வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்வார்கள் என நம்புகிறேன் என கம்பீர் கூறினார். கம்பீர் வாய்ப்பு தர வேண்டும் என்று கூறிய 2 வீரர்களுமே அவர் பயிற்சியாளராக இருந்த லக்னோ அணியில் விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, June 12, 2022, 10:19 [IST]
Other articles published on Jun 12, 2022
English summary
Gautam Gambhir feels India should play Deepak hooda in front of Dinesh karthik தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கொடுத்திருக்க கூடாது.. ஒரு மாற்றத்தை செய்யுங்கள்.. கம்பீர் அட்வைஸ்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X