For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அட, உலகக் கோப்பையை விடுங்க.. அந்த நேரத்துல பிரேசில்ல என்ன நடந்ததுன்னு தெரியுமா உங்களுக்கு?

பிரேசிலியா: உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியை கோலாகலமாக நடத்தி முடித்து விட்டு அனைவரையும் பத்திரமாக ஊர்களுக்கு அனுப்பி விட்டு ஓய்ந்துள்ளது பிரேசில். ஆனால் இந்தப் போட்டி நடந்த காலத்தில், பிரேசில் நாட்டில் என்னவெல்லாம் நடந்தது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.. நிச்சயமாக பலருக்கும் தெரியவில்லை. காரணம், அத்தனை கமுக்கமாக அதை மறைத்து வைத்திருந்தது பிரேசில்.

உண்மையில் பிரேசில் நாட்டில் இந்த உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டித் தொடருக்கு எதிராக மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்துள்ளன.

அடிதடி, தடியடி, கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு, வன்முறை என்று பிரேசிலின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியிருந்தன. ஆனால் அதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல் போட்டியை ஆரவாரமாக நடத்தி முடித்து விட்டது பிரேசில்.

வாருங்கள், பிரேசிலில் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் நடந்த சமயத்தில் மைதானங்களுக்கு வெளியே நடந்த சம்பவங்களை ஒரு பார்வை பார்க்கலாம்....

696 போராட்டங்கள்

696 போராட்டங்கள்

உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியை எதிர்த்து பிரேசில் முழுவதும் மொத்தமாக 696 போராட்டங்களை மக்கள் நடத்தியுள்ளனர்.

பிரமாண்டப் போராட்டங்கள் 15

பிரமாண்டப் போராட்டங்கள் 15

இதில் பிரமாண்டமான அளவில் அதாவது 50,000க்கும் மேல் கூடிய மக்கள் போராட்டங்கள் மட்டும் 15 ஆகும்.

காயங்களுடன் முடிந்த போராட்டம் 16

காயங்களுடன் முடிந்த போராட்டம் 16

போலீஸ் தாக்குதல் உள்ளிட்டவற்றில் பலரைப் படுகாயப்படுத்தி முடிந்த போராட்டங்கள் 16 ஆகும்.

ஆயுதங்களைப் பயன்படுத்திய போராட்டங்கள் 112

ஆயுதங்களைப் பயன்படுத்திய போராட்டங்கள் 112

போலீஸ் மற்றும் போராட்டக்காரர்கள் ஆயுதங்களை பயன்படுத்திய போராட்டங்களின் எண்ணிக்கை 112 ஆகும்.

துப்பாக்கிச் சூடு நடந்தது 10

துப்பாக்கிச் சூடு நடந்தது 10

10 போராட்டங்களின்போது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.

8 பேர் பலி

8 பேர் பலி

போராட்டங்களில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆகும்.

காயமடைந்தோர் 837 பேர்

காயமடைந்தோர் 837 பேர்

போராட்டங்களின்போது போலீஸார் மற்றும் பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்தோர் எண்ணிக்கை 837 ஆகும்.

2608 பேர் கைது

2608 பேர் கைது

2608 பேர் போராட்டங்களில் ஈடுபட்டுக் கைதானார்கள்.

2 பேருக்குத் தண்டனை

2 பேருக்குத் தண்டனை

இதில் 2 பேருக்கு வழக்குகளில் தண்டனையும் வாங்கிக் கொடுத்து விட்டது போலீஸ்.

117 பத்திரிகையாளர்களும் காயம்

117 பத்திரிகையாளர்களும் காயம்

போராட்டங்களை செய்தி சேகரிக்கச் சென்று தாக்குதலுக்குள்ளான பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 117 ஆகும்.

10 பத்திரிகையாளர்கள் கைது

10 பத்திரிகையாளர்கள் கைது

மேலும் 10 பத்திரிகையாளர்களும் செய்தி சேகரித்தபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

ஒரே ஒரு கோப்பைக்காக

ஒரே ஒரு கோப்பைக்காக

ஒரே ஒரு கோப்பைக்காக 32 அணிகள் ஒருபக்கம் மோதிக் கொண்டிருக்க அந்தக் கோப்பையை இங்கு நடத்த வேண்டாம் என்று கோரி இத்தனை பேர் பாதுகாப்புப் படையினருடன் மல்லுக்கட்டியுள்ளனர்.

Story first published: Wednesday, July 16, 2014, 11:37 [IST]
Other articles published on Jul 16, 2014
English summary
Here is an in depth analysis of Brazil protests during WC series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X