For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி, கங்குலியால் கூட முடியலை.. திட்டம் போட்டு சாதித்த கோலி.. அசாருதீன் சாதனையை உடைத்து புதிய வரலாறு

Recommended Video

Virat Kohli breaks Mohammad Azharuddin’s record

ராஞ்சி : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய டெஸ்ட் கேப்டன்கள் வரிசையில் தனி முத்திரை பதிக்கும் வகையில் புதிய சாதனை படைத்துள்ளார் விராட் கோலி.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு பாலோ ஆன் கொடுத்தார் கேப்டன் விராட் கோலி. அதன் மூலம், இந்திய அளவில் புதிய வரலாறு படைத்துள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி இருந்தது.

சிக்ஸ் அடிக்க சொல்லிருக்காங்கஜி! அடம் பிடித்த உமேஷ் யாதவ்.. நொந்து நூடுல்ஸ் ஆன தென்னாப்பிரிக்க வீரர்சிக்ஸ் அடிக்க சொல்லிருக்காங்கஜி! அடம் பிடித்த உமேஷ் யாதவ்.. நொந்து நூடுல்ஸ் ஆன தென்னாப்பிரிக்க வீரர்

மூன்றாவது டெஸ்ட்

மூன்றாவது டெஸ்ட்

இந்த நிலையில், மூன்றாவது டெஸ்டில் ஆறுதல் வெற்றி பெற தென்னாப்பிரிக்க அணியும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புள்ளிகளை பெற இந்திய அணியும் திட்டம் தீட்டின. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

இந்தியா அபார பேட்டிங்

இந்தியா அபார பேட்டிங்

முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 39 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தாலும், ரோஹித் 212, ரஹானே 115, ஜடேஜா 51 ரன்கள் குவிக்க இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 497 ரன்கள் குவித்தது.

தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்க்ஸ்

தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்க்ஸ்

தென்னாப்பிரிக்க அணி இரண்டாம் நாள் இறுதியில் ஆடத் துவங்கியது. இரண்டாம் நாளின் முடிவில் முதல் 5 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 9 ரன்கள் எடுத்து இருந்தது அந்த அணி.

162 ரன்களுக்கு ஆல் அவுட்

162 ரன்களுக்கு ஆல் அவுட்

162 ரன்களுக்கு ஆல் அவுட்

பாலோ ஆன் கொடுத்தார்

பாலோ ஆன் கொடுத்தார்

முதல் இன்னிங்க்ஸில் 200 ரன்கள் பின்தங்கி இருந்தாலே பாலோ ஆன் கொடுக்கலாம் என்ற நிலையில், கோலி பாலோ ஆன் கொடுத்து தென்னாப்பிரிக்காவை மீண்டும் பேட்டிங் ஆட அழைத்தார்.

புதிய சாதனை

புதிய சாதனை

இது கேப்டனாக விராட் கோலி கொடுக்கும் எட்டாவது பாலோ ஆன் ஆகும். இதன் மூலம் கோலி அதிக முறை பாலோ ஆன் கொடுத்த இந்திய கேப்டன் என்ற சாதனையை செய்துள்ளார். முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனின் நீண்ட நாள் சாதனையை முறியடித்துள்ளார் கோலி.

பின்தங்கிய கங்குலி, தோனி

பின்தங்கிய கங்குலி, தோனி

அசாருதீன் 7 முறை பாலோ ஆன் கொடுத்துள்ளார். கங்குலி 4 முறையும், தோனி 5 முறையும் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் பாலோ ஆன் கொடுத்துள்ளனர். இவர்கள் அனைவரையும் முந்தி இருக்கிறார் கோலி.

இரண்டு பாலோ ஆன்

இரண்டு பாலோ ஆன்

விராட் கோலி தற்போது நடந்து வரும் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் மட்டுமே இரண்டு முறை பாலோ ஆன் கொடுத்துள்ளார். இரண்டாவது போட்டியில் பாலோ ஆன் கொடுத்த இந்தியா இன்னிங்க்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்தது.

கோலியின் திட்டம்

கோலியின் திட்டம்

ஒரே தொடரில் இரண்டு முறை பாலோ-ஆன் கொடுத்து சாதனை செய்திருக்கும் கோலி, தன் திட்டத்தால் தான் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். தென்னாப்பிரிக்க அணியை எந்த இடத்திலும் சுதாரிக்க விடாமல் அடித்து வருகிறார்.

மூன்று போட்டிகள்

மூன்று போட்டிகள்

இந்த டெஸ்ட் தொடரின் மூன்று போட்டிகளிலும் கோலி தெளிவாக காய் நகர்த்தினார். முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 500 ரன்கள் முதல் 600 ரன்கள் வரை குவித்தது. இரண்டாம் நாள் இறுதியில் தென்னாப்பிரிக்க அணியை சில ஓவர்கள் ஆட வைத்து துரிதமாக விக்கெட்கள் வீழ்த்தியது. அதன் பின் இரண்டு போட்டிகளில் 300 ரன்களுக்கும் மேல் முன்னிலை பெற்று பாலோ ஆன் கொடுத்தது. இந்த பாலோ ஆன் சாதனை கேப்டனாக கோலிக்கு கிடைத்த பெரிய வெற்றி.

Story first published: Monday, October 21, 2019, 15:44 [IST]
Other articles published on Oct 21, 2019
English summary
IND vs SA : Kohli breaks Azharuddin follow on record. Dhoni and Ganguly are third and fourth on the list.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X