சிக்ஸ் அடிக்க சொல்லிருக்காங்கஜி! அடம் பிடித்த உமேஷ் யாதவ்.. நொந்து நூடுல்ஸ் ஆன தென்னாப்பிரிக்க வீரர்

India vs south africa test: umesh yadav breaks many records

ராஞ்சி : மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பின் வரிசை வீரர் உமேஷ் யாதவ் ஐந்து சிக்ஸ் அடித்துத் தள்ளி ஆச்சரியம் அளித்தார்.

அவர் அடித்த ஐந்து சிக்ஸர்களும் ஒரே தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளரின் ஓவர்களில் அடித்தவை. அதனால் நொந்து போனார் அந்த அறிமுக பந்துவீச்சாளர்.

போட்டி சூழ்நிலை கருதி கேப்டன் கோலி அடித்து ஆடுமாறு கூறியதை அடுத்து தான் உமேஷ் யாதவ் வெறும் சிக்ஸாக அடித்துத் தள்ளி இருக்கிறார்.

சாதனைகளை முறியடிப்பு

சாதனைகளை முறியடிப்பு

10 பந்துகளில் 31 ரன்கள் குவித்து ஐந்து சிக்ஸர்கள் அடித்த உமேஷ் யாதவ் பேட்ஸ்மேனாக பல்வேறு சாதனைகளை முறியடித்து இருக்கிறார். அதிலும், சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கத்தில் 39 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தாலும், ரோஹித் சர்மா 212, ரஹானே 115 ரன்கள் குவித்து அணியை மீட்டனர்.

போட்டி சூழ்நிலை

போட்டி சூழ்நிலை

அடுத்து ஜடேஜா 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 450 ரன்கள் குவித்து இருந்தது. இரண்டாம் நாள் ஆட்டம் வெளிச்சமின்மையால் பாதியில் தடைபடும் என்ற நிலை இருந்தது.

இந்தியா திட்டம்

இந்தியா திட்டம்

இந்தியா விரைவாக ரன் குவித்து தென்னாப்பிரிக்க அணியை கடைசி சில ஓவர்கள் ஆட வைத்து விக்கெட் எடுக்கலாம் என திட்டமிட்டது. அதனால், கேப்டன் கோலி ஜடேஜாவுக்கு பின் ஆட இருந்த பின்வரிசை வீரர்களை அதிரடியாக ஆடுமாறு கூறி இருக்கிறார்.

உமேஷ் வந்தார்

உமேஷ் வந்தார்

அதை அப்படியே செய்து காட்டினார் உமேஷ் யாதவ். தென்னாப்பிரிக்க அணியில் இந்தப் போட்டியில் அறிமுகம் ஆன ஜார்ஜ் லிண்டே ஓவரில் ஜடேஜா ஆட்டமிழந்த உடன் களமிறங்கினார் உமேஷ் யாதவ்.

இரண்டு சிக்ஸ்

இரண்டு சிக்ஸ்

தான் சந்தித்த முதல் இரண்டு பந்துகளையும் சிக்ஸ்-க்கு விரட்டி அதிர வைத்தார். அடுத்த ஓவரில் ஒரு ரன் எடுத்தார். சரி, இத்தோடு அதிரடி முடிந்தது என நினைத்தால், மீண்டும், லிண்டே ஓவரில் தன் சிக்ஸ் வேட்டையை தொடர்ந்தார்.

மூன்று சிக்ஸ்

மூன்று சிக்ஸ்

அந்த ஓவரில் மூன்று சிக்ஸ் அடித்தார். அதே ஓவரில் லிண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் உமேஷ். "சிக்ஸ் அடிக்க சொல்லி இருக்காங்க" என்று கண்ணை மூடிக் கொண்டு சிக்ஸ் மட்டுமே அடித்து வந்த உமேஷ்-ஆல் நொந்து போயிருந்த லிண்டே, அவரது விக்கெட்டை எடுத்தவுடன் தான் நிம்மதி அடைந்தார்.

சச்சின் சாதனை

சச்சின் சாதனை

உமேஷ் யாதவ் தான் வந்தவுடன் சந்தித்த முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸ் அடித்து, சச்சின் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் போஃபி வில்லியம்ஸ் உடன் சாதனைப் பட்டியலில் இணைந்தார். இவர்கள் மூவர் மட்டுமே டெஸ்ட் போட்டியில் தாங்கள் சந்தித்த முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸ் அடித்து உள்ளனர்.

முதல் பந்தில் சிக்ஸ்

முதல் பந்தில் சிக்ஸ்

அதே போல, இந்திய அளவில் சச்சின், தோனி, ஜாகிர் கானுக்கு அடுத்து டெஸ்ட் போட்டியில் தான் சந்தித்த முதல் பந்தில் சிக்ஸ் அடித்த வீரர் உமேஷ் யாதவ் தான்.

விரைவாக ரன் குவித்து சாதனை

விரைவாக ரன் குவித்து சாதனை

மேலும், மிக விரைவாக 30+ ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும், ஒரு போட்டியில் 10 பந்துகளுக்கும் மேல் சந்தித்த டெஸ்ட் வீரர்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்டவர் என்ற உலக சாதனையையும் நிகழ்த்தி இருக்கிறார் உமேஷ் யாதவ்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs SA : Umesh Yadav hit 5 sixes in debutant Linde overs. Captain Virat Kohli asked the tailenders to hit as the day 2 nears its end.
Story first published: Sunday, October 20, 2019, 17:31 [IST]
Other articles published on Oct 20, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X