
ஐபிஎல் 2022
பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வந்த ஹர்திக் பாண்ட்யா மீது அதீத நம்பிக்கை வைத்த அகமதாபாத் அணி, இந்த முறை அவரை கேப்டனாக நியமித்து ஒப்பந்தம் செய்துள்ளது. அதுவும் ஸ்ரேயாஸ் ஐயர் வேண்டாம் எனக்கூறிவிட்டு, பாண்ட்யாவை சேர்த்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.

பாண்ட்யா தயார்
இந்நிலையில் தனது ஃபார்ம் குறித்து ஹர்திக் பாண்ட்யா பேசியுள்ளார். அதில், நான் ஆல்-ரவுண்டராக தயாராகி வருகிறேன். ஆல்-ரவுண்டராக செயல்பட முடியும் என்ற மன உறுதி என்னிடம் வந்துள்ளது. என் உடலில் தற்போது எந்த பிரச்சினையும் இல்லை. ஐபிஎல்-ல் நான் ஆல்-ரவுண்டராகத்தான் விளையாடுவேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

புகழ்ந்த ஹர்திக்
மேலும், முழு உடற்தகுதி பெற்றதற்கு தோனியே காரணம் என அவர் கூறியுள்ளார். நான் எல்லோரிடமும் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளேன். குறிப்பாக தோனியிடம் இருந்து கற்றுள்ளேன். நான் முதன் முதலில் அவரிடம் சென்ற போது, எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். நான் தவறு செய்வதை அவர் அறிவார். இருப்பினும் அதற்கு அனுமதிப்பார். ஏனென்றால் தாம் செய்யும் தவறில் இருந்து தான் கற்றுக்கொள்ள முடியும் என்று நினைக்கக்கூடியவர் அவர். நானும் பல தவறுகளை செய்து நிறைய மாற்றிக்கொண்டுள்ளேன்.

தோனி குணம்
நாம் ஒவ்வொரு விஷயத்தை கற்கும் போதும், அதற்கு நான் தான் காரணம் என்பது போல தோனி என்றுமே காட்டிக்கொள்ள மாட்டார். நாமாகவே கற்றுக்கொண்டது போல தான் அவரின் செயல்கள் இருக்கும். ஆனால் எப்போதுமே தோனிதான் எனது மாற்றங்களுக்கு காரணமாக இருந்துள்ளார் என ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.