For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோயிலுக்கு சென்ற தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்.. நவராத்திரியை முன்னிட்டு வழிபாடு.. IND vs SA

திருவனந்தபுரம் : இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

டி20 உலக கோப்பை தொடருக்கு முன் கடைசியாக இந்திய அணி பங்கேற்கும் தொடர் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

3 ஆண்டுகளுக்கு பிறகு திருவனந்தபுரத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால், ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே டெஸ்ட் தொடர்? இங்கிலாந்து தந்த சூப்பர் ஆஃபர்.. பிசிசிஐ கூறிய பதில் என்ன?இந்தியா - பாகிஸ்தான் இடையே டெஸ்ட் தொடர்? இங்கிலாந்து தந்த சூப்பர் ஆஃபர்.. பிசிசிஐ கூறிய பதில் என்ன?

கேசவ் மகாராஜ் பூர்வீகம்

கேசவ் மகாராஜ் பூர்வீகம்

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவில் ஏராளமான இந்தியர்கள் வசிப்பது நமக்கு தெரிந்த கதை தான். அது மட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்காவில் பல வீரர்கள் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் தான். அந்த அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் ஹசிம் அம்லாவே இந்தியாவை சேர்ந்தவர் தான். தற்போது தென்னாப்பிரிக்க அணியில் இடம்பிடித்துள்ள கேசவ் மகாராஜ், இந்தியாவின் உபி மாநிலத்தை சேர்ந்தவர்.

கோயிலில் வழிபாடு

கோயிலில் வழிபாடு

1864ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து கூலி தொழில் செய்வதற்காக குடும்பத்துடன் பலரும் தென்னாப்பிரிக்கா சென்றார்கள். அப்படி வந்தடைந்தவர்கள் தான் கேசவ் மகாராஜின் முன்னோர்கள். இந்த நிலையில் திருவனந்தபுரம் வந்துள்ள கேசவ் மகாராஜ், நவராத்திரியை கொண்டாடும் விதமாக ஸ்ரீ பத்மநாதசுவாமி கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.

ரசிகர்கள் வரவேற்பு

ரசிகர்கள் வரவேற்பு

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக ஸ்ரீ பத்மநாதசுவாமி கோயில் விளங்குகிறது. இதனால், கேசவ் மகாராஜ் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டுள்ளார். கேசவ் மகாராஜின் இந்த புகைப்படத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இந்திய வீரர்கள் எங்கு விளையாட சென்றாலும் கோயிலுக்கு செல்வதில்லை. ஆனால் வெளிநாட்டு வீரர் பயபக்தியுடன் செல்வதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கேசவ் மகாராஜ் vs இந்தியா

கேசவ் மகாராஜ் vs இந்தியா

இதே போன்று கேசவ் மகாராஜோடு விளையாடும் மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் தப்ரைஸ் ஷாம்சியின் முன்னோர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். கடந்த முறை, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்க அணியில் பெவுமாக்கு காயம் ஏற்பட்ட போது, கேசவ் மகாராஜ் தான் அணியை வழிநடத்தினார். இதுவரை இந்தியாவுக்கு எதிராக 5 டி20 போட்டியில் விளையாடி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

Story first published: Wednesday, September 28, 2022, 16:58 [IST]
Other articles published on Sep 28, 2022
English summary
Keshav Maharaj visited sri Padmanabhaswamy temple in Thiruvananthapuram கோயிலுக்கு சென்ற தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்.. நவராத்திரியை முன்னிட்டு வழிபாடு.. IND vs SA
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X