For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலி, ரிஷப் பண்ட் ரிட்டன்ஸ்.. யாருடைய இடம் காலியாக போகிறது.. தலைவலியில் இந்திய அணி

பிர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Recommended Video

Virat Kohli 3 மாதம் Break எடுக்க வேண்டும் Michael Vaughan கருத்து *Cricket

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா அரைசதம் விளாச, சூர்யகுமார் 39 ரன்களும், தீபக் ஹூடா 33 ரன்களும் எடுத்தனர்.

மோசடி செய்கிறதா இங்கிலாந்து அணி.. டியூக் பந்தால் ஜெய்க்கும் ஸ்டோக்ஸ்? 3 முறை புகார் அளித்த இந்தியா மோசடி செய்கிறதா இங்கிலாந்து அணி.. டியூக் பந்தால் ஜெய்க்கும் ஸ்டோக்ஸ்? 3 முறை புகார் அளித்த இந்தியா

இதனால் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 198 ரன்களை விளாச, இங்கிலாந்து அணி 148 ரன்களுக்கு சுருண்டது.

குழப்பத்தில் இந்திய அணி

குழப்பத்தில் இந்திய அணி

இந்த நிலையில், பிர்மிங்காமில் 2வது டி20 போட்டி நடைபெறுகிறது. இதில் விராட் கோலி, ரிஷப் பண்ட், பும்ரா ஆகியோர் அணிக்கு திரும்ப உள்ளனர். ஏற்கனவே விளையாடி வரும் அணியில் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சிறப்பாக விளையாடுவதால், தற்போது எந்த வீரர்களை நீக்கிவிட்டு சீனியர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது என்ற குழப்பத்தில் இந்திய அணி நிர்வாகம் உள்ளது.

தீபக் ஹூடா

தீபக் ஹூடா

விராட் கோலி அணியின் மூத்த வீரர். எப்போதும் 3ஆம் வரிசையில் இறங்க கூடியவர். ஆனால் சில போட்டிகளாக 3வது வரிசையில் விளையாடி வரும் தீபக் ஹூடா சதம் அடித்து அசத்தி இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடி இருக்கிறார். இதனால், தீபக் ஹூடாவை எப்படி நீக்குவது என்ற தலைவலி ஏற்பட்டுள்ளது.

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

இதே போன்று அதிரடி வீரர் ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு திரும்புகிறார். அவர் நடுவரிசையில் விளையாட கூடியவர். ஆனால் நடுவரிசையில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் உள்ளனர். இதனால் பண்ட் விக்கெட் கீப்பர் என்பதால் அவருக்கு பதிலாக அணியில் இருக்கும் இஷான் கிஷனை தான் நீக்க வேண்டும்.

தொடக்க வீரர் யார்?

தொடக்க வீரர் யார்?

இஷான் கிஷனை நீக்கினால், அப்போது தொடக்க வீரர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கனவே பண்ட்டை தொடக்க வீரராக டி20, ஒருநாள் போட்டியில் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், அப்படி ஒரு திட்டத்தை தான் பிசிசிஐ செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று ஆர்ஸ்தீப் சிங்கிற்கு பதிலாக பும்ரா களமிறங்குவார் என தெரிகிறது.

Story first published: Friday, July 8, 2022, 18:44 [IST]
Other articles published on Jul 8, 2022
English summary
Virat kohli and Rishabh pant return to the india team made confusion விராட் கோலி, ரிஷப் பண்ட் ரிட்டன்ஸ்.. யாருடைய இடம் காலியாக போகிறது.. தலைவலியில் இந்திய அணி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X