For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மோசடி செய்கிறதா இங்கிலாந்து அணி.. டியூக் பந்தால் ஜெய்க்கும் ஸ்டோக்ஸ்? 3 முறை புகார் அளித்த இந்தியா

எட்ஜ்பாஸ்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் பலத்த அடி வாங்கியது.

நியூசிலாந்துக்கு எதிரான கடைசியாக விளையாடிய மூன்று போட்டியிலும் இதே போல் தான் கடைசி இன்னிங்ஸ் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணி மோசடி செய்து வெற்றி பெறுவதாக புகார் கூறியுள்ளனர் .

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்.. புஜாராவின் தரமான இன்னிங்ஸ்.. வலுவான நிலையில் இந்தியாஇங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்.. புஜாராவின் தரமான இன்னிங்ஸ்.. வலுவான நிலையில் இந்தியா

டியூக் பந்தால் சிக்கல்

டியூக் பந்தால் சிக்கல்

இங்கிலாந்து பொறுத்தவரை அங்கு நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் டியூக் வகை சிவப்பு பந்துகளை தான் பயன்படுத்துகிறது.பொதுவாக இங்கிலாந்தில் பந்து நன்றாக ஸ்விங் ஆகும். கடைசி இன்னிங்ஸில் 300 ரன்கள் அடிப்பது மிகவும் கஷ்டம் . ஆனால் இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் கடைசி இன்னிங்ஸில் தான் சிறப்பாக செயல்படுகிறது. இதற்கு டியூக் பந்தின் செயல்பாடு தான் காரணம் என்று கூறப்படுகிறது.

ஸ்விங் சிக்கல்

ஸ்விங் சிக்கல்

இங்கிலாந்தில் பந்து எப்போதும் ஸ்விங்க ஆகும். குறிப்பாக வானம் மேகமூட்டத்துடன் இருந்தால் அது பேட்ஸ்மெண்ட்க்கு கஷ்ட காலம் தான். ஆனால் டியூக் பந்து ஸ்விங் ஆவது தொடக்கத்திலேயே நின்று விடுகிறது. இதனால் பந்துவீச்சாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக முதல் நான்கு விக்கெட்டுகள் விரைவில் வீழ்ந்து விடுகிறது. அதன் பிறகு பந்து பழசாகி விடுவதால் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறிவிடுகிறது.

பரபரப்பு எகுற்றச்சாட்டு

பரபரப்பு எகுற்றச்சாட்டு

மேலும் ட்யூக் பந்துகள் சாப்ட் ஆக மாறி விடுகிறது. பந்தின் பளபளப்பும் உடனடியாக போய்விடுகிறது. இதனால் பந்து வீச்சாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு தான் செயல்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிராடு டியூக் பந்துகள் சரியாக இல்லை என்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார். பந்தின் ஷேப்பும் 10 , 15 ஓவர்களில் மாறிவிடுவதாக அவர் குறை கூறியுள்ளார்.

இந்தியா அளித்த புகார்

இந்தியா அளித்த புகார்

இதனால் வேகப்பந்து வீச்சு சுத்தமாக எடுபடுவதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.அப்படி என்றால் இங்கிலாந்துக்கும் சிக்கல் தானே என்று கேள்வி எழலாம்? ஆனால் பிரச்சினையே இங்குதான் எழுகிறது. நேற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடும் போது இந்தியாவுக்கு வழங்கப்பட்ட பந்தில் பிரச்சனை இருப்பதாக பும்ரா நடுவரிடம் புகார் கூறினார். பந்தின் ஷேப் சரியாக இருக்கிறதா என்று நடுவர்கள் சோதித்துப் பார்த்து, பந்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறிவிட்டனர் .

தோல்விக்குசு காரணமா?

தோல்விக்குசு காரணமா?

இது போன்று மூன்று முறை பும்ரா நடுவரிடம் முறையிட 20 ஓவர் கழித்து தான் நடுவர்கள் வேறொரு பந்தை வழங்கினர். அதன் பிறகு சட்டென்று இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தன. மீண்டும் பந்தில் பிரச்சனை ஏற்பட்டு இங்கிலாந்து வீரர்கள் ரன் குவிக்க தொடங்கினர் . இன்று காலையில் கூட பந்தில் சிக்கல் இருப்பதாக பும்ரா நடுவரிடம் முறையிட்டார் . அதனை சோதித்த நடுவர் மீண்டும் வேறொரு பந்தை வழங்கினர். இதுபோன்று சிக்கல் ஏற்படுவதால் தான் கடைசி இன்னிங்ஸில் பேட்டிங்கிற்கு சாதகமாக சூழல் மாறி விடுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Story first published: Tuesday, July 5, 2022, 17:13 [IST]
Other articles published on Jul 5, 2022
English summary
England duke ball issue created controversy in edgbaston testமோசடி செய்கிறதா இங்கிலாந்து அணி.. டியூக் பந்தால் ஜெய்க்கும் ஸ்டோக்ஸ்? 3 முறை புகார் அளித்த இந்தியா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X