For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான ஏற்பாடுகள் தயார்- பிபா அறிவிப்பு

By Veera Kumar

சாபவுலோ: உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டித்தொடரை நடத்த பிரேசில் முழு தயாராகிவிட்டதாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளன (பிபா) தலைவர் சீப் பிளாட்டர் தெரிவித்தார். உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் பிரேசில் நாட்டில் வரும் 12ம்தேதி முதல் அடுத்தமாதம் 13ம்தேதி வரை நடைபெறுகின்றன. துவக்க விழா நிகழ்ச்சிகள் அந்த நாட்டின் சாபவுலோ நகரில் நடக்கிறது.

இதனிடையே விளையாட்டு போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் இன்னும் கட்டுமான பணிகள் முழுமையடையாததாகவும், நிதி பற்றாக்குறையில் பிரேசில் சிக்கி தவிப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. பிரேசிலில் நடைபெறும் உள்நாட்டு கலவரங்களும் கால்பந்தாட்ட போட்டிகளுக்கு பாதிப்பை ஏர்படுத்தலாம் என்று கூறப்பட்டது. இதையடுத்து பிபா தலைவர் சீப் பிளாட்டர் பிரேசிலில் சுற்றுப்பயணம் செய்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

Brazil ready for the World Cup: FIFA

அதன்பிறகு நிருபர்களிடம் சீப் பிளாட்டர் கூறியதாவது: பிபா உறுதியாக கூறிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் ஒரு திருவிழாவைப்போல இருக்கப்போகிறது என்பதுதான். இப்போது பிரேசில் குறித்து நிலவும் கருத்துக்கள் போட்டித்தொடர் ஆரம்பித்த பிறகு மாறும் என்று நம்புகிறேன் என்றார்.

பிபா, பொதுச்செயலாளர் ஜெரோம் வால்க் கூறுகையில், முதல் இரு வாரங்களுக்கு 32 அணிகளும் போட்டிகளில் பங்கேற்கும் என்பதால் அப்போதுதான் சமாளிக்க சிரமமாக இருக்கும். அதற்கடுத்த வாரங்களில் அணிகள் எண்ணிக்கை குறையும்போது வேலைப்பளுவும் குறையும். விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ள மைதானங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதை உறுதி செய்துள்ளோம். எனவே விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது குறித்த அச்சம் யாருக்கும் தேவையில்லை என்றார்.

Story first published: Friday, June 6, 2014, 17:51 [IST]
Other articles published on Jun 6, 2014
English summary
FIFA president Sepp Blatter has insisted Brazil is ready to host the World Cup, less than a week before football's showpiece event kicks off in Sao Paulo.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X