For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெஸ்ட் போட்டியை விடுங்க பாஸ்.. நிறைய சாதனைகள் காத்திருக்கு!

சௌதாம்ப்டன் : இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-2 என்ற நிலையில் பின்தங்கியுள்ளது.

kohli ,ishant sharma and james anderson during Fourth test


இந்நிலையில் நான்காவது போட்டி சௌதாம்ப்டனில் உள்ள ரோஸ் பௌல் மைதானத்தில் நாளை நடைபெற இருக்கிறது.இப்போட்டியில் இந்திய மற்றும் இங்கிலாந்து வீரர்கள் எதிர் நோக்கியுள்ள சாதனைகளை பற்றிய ஒரு சிறு தொகுப்பு:

விராட் கோஹ்லி:

இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி இந்த தொடரில் சிறப்பான பார்மில் உள்ளார். அபாரமாக விளையாடி வரும் அவர் இந்த தொடரில் இதுவரை 440 ரன்களை எடுத்துள்ளார். ஒட்டுமொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் அவர் இதுவரை 5994 ரன்களை எடுத்துள்ளார். இன்னும் 6 ரன்களை எடுத்தால் டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்களை கடந்த 10ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.

இஷாந்த் சர்மா:

இந்திய அணியின் வேகபந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 249 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இன்னும் 1 விக்கெட் வீழ்த்தினால் டெஸ்ட் போட்டிகளில் 250+ விக்கெட்களை வீழ்த்திய 7ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன்:

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது கிரிக்கெட் வாழ்வின் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்த அவருக்கு இன்னும் 7 விக்கெட்கள் மட்டுமே தேவை. டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 557 விக்கெட்களை வீழ்த்தியுள்ள அவர் இன்னும் 7 விக்கெட்களை வீழ்த்தினால் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வேகபந்துவீச்சாளர் என்கிற சாதனையை படைப்பார். ஆஸ்திரேலியாவின் மெக்ராத் 563 விக்கெட்கள் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.
Story first published: Wednesday, August 29, 2018, 11:31 [IST]
Other articles published on Aug 29, 2018
English summary
Approaching milestones for kohli ,ishant sharma and james anderson during Fourth test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X