போட்ட பிளான் எல்லாம் காலி.. சேப்பாக்கத்தில் நடக்கும் இங்கிலாந்து டெஸ்ட்.. ஆனால் ஒரு பெரிய சிக்கல்!

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது முடிந்துள்ள நிலையில், இந்தியா இங்கிலாந்து இடையிலான கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடக்க உள்ளது.

இங்கிலாந்திற்கு எதிராக நடைப்பெற உள்ள கிரிக்கெட் தொடரில் இரண்டு முக்கியமான போட்டிகள் சென்னையில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களுக்கு பின் சென்னையில் இப்படி கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது.

டெஸ்ட்

டெஸ்ட்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் பிப்ரவரி 5ம் தேதி நடக்கும். இரண்டாவது டெஸ்ட் போட்டியும் சென்னையில் 13ம் தேதி நடக்க உள்ளது. 3வது டெஸ்ட் போட்டி 24ம் தேதி பிப்ரவரி மாதம் நடக்க அஹமதாபாத்தில் உள்ளது. 4வது டெஸ்ட் போட்டி 4ம் தேதி மார்ச் மாதம் அஹமதாபாத்தில் நடக்க உள்ளது.

சென்னை

சென்னை

இதன் காரணமாக சென்னையில் மீண்டும் நீண்ட நாட்களுக்கு பின் கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சென்னையில் கடந்த இரண்டு வருடமாக பெரிய அளவில் கிரிக்கெட் தொடர் நடக்காத நிலையில் மீண்டும் சென்னையில் இவ்வளவு பெரிய கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது.

ஆனால்

ஆனால்

அதிலும் இங்கிலாந்து போன்ற வலுவான டீம் சென்னைக்கு வருவதால் இந்த இரண்டு போட்டிகள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாதி ரசிகர்கள் அனுமதிக்கப்படலாம் என்று தகவல்கள் வந்தது.

கொரோனா

கொரோனா

ஆனால் கொரோனா காரணமாக மொத்தமாக ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ரசிகர்கள் இல்லாமல்தான் போட்டி நடக்கும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு, மக்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு .கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Fan won't be allowed for the First two tests of India vs England in Chennai Chepauk.
Story first published: Friday, January 22, 2021, 17:55 [IST]
Other articles published on Jan 22, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X