என்னாது நான் அவுட்டா? அது எப்ப நடந்துச்சு? அஸ்வினை பார்த்து அரண்டு போய் நின்ற தென்னாப்பிரிக்க வீரர்!

அஸ்வினை பார்த்து அரண்டு போய் நின்ற டி காக்

புனே : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்க வீரர் டி காக் தான் அவுட் ஆனதை நம்ப முடியாமல் அரண்டு போய் நின்றார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கின் போது தென்னாப்பிரிக்க அணி தடுமாறி வந்தது. அப்போது சிறப்பாக ஆடி வந்த டி காக் அஸ்வினின் மாயாஜால சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார்.

இந்தியா ரன் குவிப்பு

இந்தியா ரன் குவிப்பு

இந்தப் போட்டியில் இந்தியா முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்தது. கோலி 254*, மயங்க் அகர்வால் 108, ஜடேஜா 91, ரஹானே 59, புஜாரா 58 ரன்கள் குவித்தனர்.

தென்னாப்பிரிக்காவுக்கு சவால்

தென்னாப்பிரிக்காவுக்கு சவால்

இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 601 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. தென்னாப்பிரிக்க அணி மிகப் பெரிய சவாலை எதிர்கொண்டு முதல் இன்னிங்க்ஸ் ஆட களமிறங்கியது.

விக்கெட் சரிவு

விக்கெட் சரிவு

இரண்டாம் நாள் இறுதியில் ஆட வந்த தென்னாப்பிரிக்கா 33 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. மூன்றாம் நாளும் அந்த அணியின் விக்கெட் சரிவு தொடர்ந்தது. 53 ரன்களுக்கு 5 விக்கெட்கள் இழந்த நிலையில் கேப்டன் பாப் டு ப்ளேசிஸ் உடன் பேட்டிங் செய்ய வந்தார் டி காக்.

டு ப்ளேசிஸ் - டி காக் ஜோடி

டு ப்ளேசிஸ் - டி காக் ஜோடி

இருவரும் ஆறாவது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடியை பிரித்தால் தென்னாப்பிரிக்க அணியின் பின்வரிசை வீரர்களை மட்டுமே அடுத்து ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என்ற நிலை.

அஸ்வின் ஓவர்

அஸ்வின் ஓவர்

அந்த நேரத்தில் அஸ்வின் 38வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை ஷார்ட் லென்த்தில், லெக் ஸ்டம்ப்பில் பிட்ச் ஆகுமாறு வீசினார். அந்த பந்து வரும் திசையை கணிக்க தடுமாறிய டி காக் பந்தை தவற விட்டார்.

புரியாமல் விழித்த டி காக்

புரியாமல் விழித்த டி காக்

பந்து அருமையாக சுழன்று லெக் திசையில் இருந்து ஆஃப் திசைக்கு மாறி, ஆஃப் ஸ்டம்ப்பின் பெயில்சை தகர்த்தது. டி காக் பந்து எப்படி பேட்டை தாண்டி உள்ளே சென்றது என்பதே புரியாமல் விழித்தார்.

அவுட் ஆனதை நம்பவில்லை

அவுட் ஆனதை நம்பவில்லை

மேலும், ஸ்டம்ப் தகர்ந்து கிடந்ததை நம்ப முடியாமல் அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தார். ஒருவேளை விக்கெட் கீப்பர் சாஹா பெயில்சை தட்டி விட்டிருக்கலாம் என நினைத்தாரோ, என்னவோ அவுட் ஆகி விட்டோம் என அவர் நம்பவில்லை.

3 பவுல்டு அவுட்

3 பவுல்டு அவுட்

சில கணங்கள் சென்ற பின் தான் அவருக்கு என்ன நடந்தது என்பதே புரிந்தது போல. சில வினாடிகளுக்கு பின் தான் அவர் வெளியேறினார். இந்த டெஸ்ட் தொடரில் அவர் ஆடிய மூன்று இன்னிங்க்ஸ்களிலும் அவர் பவுல்டு அவுட் முறையில் தான் ஆட்டமிழந்து இருக்கிறார்.

முதல் டெஸ்ட் விக்கெட்

முதல் டெஸ்ட் விக்கெட்

முதல் டெஸ்டின் முதல் இன்னிங்க்ஸில் இதே போல அஸ்வின் பந்தில் பவுல்டு அவுட் ஆனார். இரண்டாம் இன்னிங்க்ஸில் ஷமியின் ரிவர்ஸ் ஸ்விங்கில் சிக்கி பவுல்டு அவுட் ஆனார்.

தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்

தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்

தென்னாப்பிரிக்கா அணியின் முதல் இன்னிங்க்ஸில் கேப்டன் பாப் டு ப்ளேசிஸ் மட்டுமே சிறப்பாக பேட்டிங் செய்து 64 ரன்கள் குவித்தார். டி காக் 31, ப்ரூன் 30 ரன்கள் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களே எடுத்து ஆட்டமிழந்தனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

English summary
IND vs SA : De Cock stunned by Ashwin’s bowling which took the bails off. He shell shocked for few moments before realising he was out.
Story first published: Saturday, October 12, 2019, 15:02 [IST]
Other articles published on Oct 12, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more