For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி நேரத்தில் பறந்த அட்வைஸ்.. ப்ளேயிங் 11ல் இருந்து முக்கிய வீரர் நீக்கம்.. ட்விஸ்ட் தந்த ராகுல்!!

பார்ல்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டிக்கான ப்ளேயிங் 11ல் கடைசி நேர மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரு அணிகளும் மோதி வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1 - 0 என தென்னாப்பிரிக்க அணி முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இந்திய அணிக்கு வாழ்வா? சாவா? கட்டமாக இன்று 2வது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது.

“இந்திய வீரர்களுக்கு அடித்த லக்” தென்னாப்பிரிக்கா முக்கிய ப்ளேயர் விலகல்.. கூடிய வெற்றி வாய்ப்பு!“இந்திய வீரர்களுக்கு அடித்த லக்” தென்னாப்பிரிக்கா முக்கிய ப்ளேயர் விலகல்.. கூடிய வெற்றி வாய்ப்பு!

ப்ளேயிங் 11 குழப்பம்

ப்ளேயிங் 11 குழப்பம்

இதற்காக இந்திய அணியின் ப்ளேயிங் 11ஐ தேர்வு செய்வதில் தான் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. அதாவது கடந்த போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் மோசமாக சொதப்பியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் ஏமாற்றினார். எனவே இன்றைய போட்டியில் அவரை நீக்கிவிட்டு, முழு நேர பேட்ஸ்மேனாக சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்படுவதாக தகவல் வெளியானது. மேலும் ஷர்துலை நீக்கிவிட்டு முகமது சிராஜ் சேர்க்கப்படுவார் என்றும் கூறப்பட்டது.

கடைசி நேர ட்விஸ்ட்

கடைசி நேர ட்விஸ்ட்

இந்நிலையில் அதில் பெரும் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. அதாவது வெங்கடேஷ் ஐயர் தொடர்ந்து ப்ளேயிங் 11ல் விளையாடவுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் ப்ளேயிங் 11ல் இருந்து நீக்கப்படவுள்ளதாகவும் அவருக்கு மாற்றாக ருதுராஜ் கெயிக்வாட் அணிக்குள் வரவுள்ளதாகவும் தெரிகிறது. ஓப்பனர்களாக ருதுராஜ் மற்றும் ஷிகர் தவானும், 4வது வீரராக கே.எல்.ராகுலும் விளையாடவுள்ளனர்.

காரணம் என்ன

காரணம் என்ன

கடந்த முதல் போட்டியில் வெங்கடேஷ் ஐயர் தனது பவுலிங் திறமையை நிரூபிக்க வாய்ப்புகளே கொடுக்கப்படவில்லை. முதல் போட்டி என்பதால் பேட்டிங்கிலும் பெரிதாக சோபிக்க முடியவில்லை. எனவே ஒரு போட்டியை வைத்து அவரை ஒதுக்கக்கூடாது என முன்னாள் வீரர் கருத்துக்கள் கூறியதால், திடீரென ஸ்ரேயாஸின் பக்கம் பார்வையை திருப்பியுள்ளார் கே.எல்.ராகுல்.

பந்துவீச்சு மாற்றம்

பந்துவீச்சு மாற்றம்

பந்துவீச்சை பொறுத்தவரையில் ஏற்கனவே அணியில் வெங்கடேஷ் ஐயர் இருப்பதால், இந்த முறை ஷர்துலை நீக்கிவிட்டு முகமது சிராஜை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் நிச்சயம் வெங்கடேஷ் ஐயரை பவுலிங்கில் பயன்படுத்தி பார்க்க கே.எல்.ராகுல் ஆவலுடன் உள்ளதாகவும் தெரிகிறது.

Story first published: Friday, January 21, 2022, 13:14 [IST]
Other articles published on Jan 21, 2022
English summary
KL Rahul gives a last minute twist in Team india playing 11 ahead of India vs south africa 2nd ODI
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X