For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“3 தனித்தனி அணிகள்.. ஆனாலும் ஒரு சிக்கல்”.. பிசிசிஐ திட்டம் குறித்து கபில் தேவ் அறிவுரை.. அடேங்கப்பா

மும்பை: இந்திய அணியில் வரும் நாட்களில் பலகட்ட அணிகள் உருவாகி இருப்பதை பார்க்க முடியும் என முன்னாள் வீரர் கபில் தேவ் கூறியுள்ளார். ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடனான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் வென்றுவிட்டது.

ஏற்கனவே இலங்கை அணியுடனான தொடரை ஒயிட் வாஷ் செய்து அசத்திய சூழலில் தற்போது நியூசிலாந்தையும் ஒயிட் வாஷ் செய்யுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

“ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்”.. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்! “ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்”.. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!

தனித்தனி அணிகள்

தனித்தனி அணிகள்

இந்த தொடர் வெற்றிகளுக்கு அணி தேர்வுகள் காரணமாக பார்க்கப்படுகிறது. அதாவது டி20 அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவின் தலைமையில் இளம் படையும், ஒருநாள் கிரிக்கெட்டிற்கு ரோகித் சர்மாவின் தலைமையில் சீனியர் வீரர்களும் களமிறங்குகின்றனர். குறிப்பாக கே.எல்.ராகுல், ஜஸ்பிரித் பும்ரா, ஜடேஜா போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமலும் கூட இளம் வீரர்களே சாதித்து விடுகின்றனர்.

கபில் தேவ் பேச்சு

கபில் தேவ் பேச்சு

இந்நிலையில் இதுகுறித்து கபில் தேவ் புகழ்ந்து தள்ளியுள்ளார். அதில், சமீப நாட்களாக இந்திய அணியில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுவதையும், புது வீரர்கள் வாய்ப்பு பெறுவதையும் பார்க்க முடிகிறது. வரும் நாட்களில் டெஸ்ட் கிரிக்கெட், டி20 வடிவம் மற்றும் 50 ஓவர் கிரிக்கெட்டிற்கு என தனித்தனியாக அணிகள் உருவாக்கப்படுவதை பார்க்கலாம் என நம்புகிறேன்.

ஆனால் ஒரு சிக்கல்

ஆனால் ஒரு சிக்கல்

ஒவ்வொரு வடிவத்திற்கும் தனித்தனி அணியை பயன்படுத்தினால் மட்டுமே அதிகப்படியான வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து அவர்களின் திறமையை பார்க்க முடியும். எனினும் தொடர்ச்சியாக அந்தந்த அணிகளுக்கு வாய்ப்பை தரவேண்டும். இல்லையென்றால் அதில் வெவ்வெறு வீரர்கள் மாற்றப்படுகின்றனர். ஆட்ட நாயகன் விருது பெற்ற ஒருவரை வேறு ஒரு வீரரின் வருகைக்காக வெளியே உட்கார வைக்கின்றனர். இதுதான் புரியவில்லை.

உலகக்கோப்பை ப்ளான்

உலகக்கோப்பை ப்ளான்

2023ம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் சொந்த மண்ணிலேயே நடைபெறவுள்ளது. இதனை வெல்லும் அளவிற்கான தரமான வீரர்கள் நம்மிடம் உள்ளது. ஆனால் கலவையான வீரர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி தர வேண்டும். அவர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு நல்ல உடற்தகுதியுடன் வைத்திருக்கவேண்டும் என கபில் தேவ் கூறியுள்ளார்.

Story first published: Monday, January 23, 2023, 12:53 [IST]
Other articles published on Jan 23, 2023
English summary
Former Indian Player Kapil dev opens up about India's split teams for different formats, here is the full speech
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X