For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 50 கேட்சுகள் பிடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் டோணி!

By Mathi

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 50 கேட்சுகளைப் பிடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கேப்டன் டோணி.

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர் போட்டிகளில் இந்தியா விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வியைத் தழுவ ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை வகிக்கிறது.

MS Dhoni becomes first Indian wicketkeeper to take 50 catches against Australia in Tests

தற்போது மெல்போர்ன் நகரில் 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 50வது கேட்ச் பிடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கேப்டன் டோணி. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொத்தம் 19 போட்டிகளில் விளையாடில் 51 கேட்சுகள் பிடித்தும், 14 ஸ்டம்பிங் செய்தும் மொத்தமாக 65 முறை அவுட் செய்துள்ளார் டோணி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் ஆலம் நாட்தான் 97 கேட்சுகள், 8 ஸ்டம்பிங் செய்து முன்னணியில் உள்ளார். அவர் மொத்தம் 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மேலும் 90 டெஸ்ட் போட்டிகளில் 250 கேட்சுகளைப் பிடித்து விக்கெட் கீப்பர்களில் 7வது இடத்தில் இருக்கிறார் டோணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, December 27, 2014, 10:42 [IST]
Other articles published on Dec 27, 2014
English summary
Indian captain Mahendra Singh Dhoni added another feather on his hat on Friday as he became the only Indian glovesman to take 50 catches against Australia in Tests.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X