“எல்லாம் மாறிடிச்சு.. ஆனால் அது மட்டும்”.. வெற்றி பெற்றும் ரோகித் அதிருப்தி.. என்ன காரணம் தெரியுமா?

ஐதராபாத்: ஆஸ்திரேலிய அணியுடனான டி20 தொடரை வென்ற போதும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஒரு குறையை கூறியுள்ளார்.

Recommended Video

IND vs AUS Stumps-ஐ தட்டிவிட்ட Dinesh Karthik ஆனாலும் Runout ஆன Maxwell

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 186/7 ரன்களை குவித்தது.

தொடரை வென்றது இந்தியா.. சூர்யகுமார், விராட் கோலி அதிரடி.. ஆஸ்திரேலயாவுக்கு பதிலடி தந்த ரோகித் படைதொடரை வென்றது இந்தியா.. சூர்யகுமார், விராட் கோலி அதிரடி.. ஆஸ்திரேலயாவுக்கு பதிலடி தந்த ரோகித் படை

3வது டி20 போட்டி

3வது டி20 போட்டி

அந்த அணியில் முன்னணி வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க 117 ரன்களுக்கெல்லாம் 6 விக்கெட்களை இழந்தது. எனினும் கடைசி நேரத்தில் ஜோடி சேர்ந்த டிம் டேவிட் 54 ரன்களும், டேனியல் சாம்ஸ் 28 ரன்களும் குவித்து ஆஸ்திரேலிய அணியை 186 ரன்களுக்கு உயர்த்தி சென்றனர்.

இந்திய அணி வெற்றி

இந்திய அணி வெற்றி

கடின இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 1 ரன்னுக்கும், ரோகித் சர்மா 17 ரன்களுக்கும் அவுட்டாகி ஏமாற்றினர். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி (63), சுர்யகுமார் யாதவ் 69 ரன்களும் விளாசி இந்தியாவை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். இறுதியில் ஹர்திக் பாண்ட்யா 16 பந்துகளில் 25 ரன்களை குவித்ததால் 19.5 ஓவர்களில் இந்தியா 187 ரன்களை எட்டி வெற்றி கண்டது. இதன் மூலம் தொடரையும் 2 - 1 என கைப்பற்றியது.

ரோகித் பேச்சு

ரோகித் பேச்சு

இந்நிலையில் இந்த வெற்றி குறித்து ரோகித் சர்மா அதிருப்தி தெரிவித்துள்ளார். அதில், இந்த 3 போட்டிகளிலும் ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கி வெற்றிக்கு உதவினார்கள். இது இந்தியாவின் பேட்டிங் பலத்தை காட்டுகிறது. ஆனால் பந்துவீச்சில் பிரச்சினை அப்படியே உள்ளது.

பவுலிங்

பவுலிங்

ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் காயத்தில் மீண்டு வந்தப் பிறகு சிறப்பாக செயல்படவில்லை. அவர்கள் செட்டில் ஆவதற்கு இன்னும் நேரம் தேவை எனத்தெரிகிறது. தென்னாப்பிரிக்க தொடரில் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என நம்புகிறேன் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Rohit sharma speech after India Defeat Australia in 3rd T20 match, and won the 3 match series
Story first published: Monday, September 26, 2022, 10:25 [IST]
Other articles published on Sep 26, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X