மொஹாலி டெஸ்ட் - இந்தியா நிதான ஆட்டம்

Posted By:
Gowtham Gambir
மொஹாலி: மொஹாலியில் நடந்து வரும் இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா நிதானமாக பேட்டிங் செய்து வருகிறது. கம்பீர் அரை சதம் போட்டார். ஷேவாக் டக் அவுட் ஆனார்.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று காலை மொஹாலியில் தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் டோணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

கம்பீரும், ஷேவாக்கும் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஷேவாக் அவுட் ஆனார்.

இதையடுத்து கம்பீரும், டிராவிடும் இணைந்து விளையாடத் தொடங்கினர். கடந்த சில போட்டிகளில் விளையாடாமல் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ள டிராவிட் இன்றைய போட்டியில் சற்றே சிறப்பான ஆட்டத்தைக் காட்டினார்.

கம்பீரும், அவரும் இணைந்து நிதானமான முறையில் ரன்களைச் சேர்த்து வருகின்றனர்.

உணவு இடைவேளைக்கு முன்னதாக அரை சதம் போட்டார் கம்பீர். 45வது ஓவரில் கம்பீர் 72 ரன்களுடனும், டிராவிட் 43 ரன்களுடனும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

Story first published: Friday, December 19, 2008, 14:04 [IST]
Other articles published on Dec 19, 2008

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற