For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நான்காவது டெஸ்ட்.இரண்டாம் நாள் ...புஜாராவின் அபார சதம்..டாப் 5 நிகழ்வுகள்

சௌதாம்ப்டன் : இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சௌதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 273 ரன்களை குவித்து முதல் இன்னிங்சில் 27 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 6 ரன்களை எடுத்திருந்தது.

Key moments on day 2 fourth test - pujara ton makes india lead


இரண்டாம் நாள் போட்டியின் டாப் 5 நிகழ்வுகள் இதோ

1 ஏமாற்றிய தொடக்க வீரர்கள்

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் மற்றும் தவான் மீண்டுமொரு முறை சிறப்பான தொடக்கம் தரமுடியாமல் தங்களது விக்கெட்களை இழந்தனர். ராகுல் 19 ரன்களிலும்,தவான் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த தொடரில் இதுவரை ஒரு தொடக்க ஆட்டக்காரர் கூட அரைசதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிரடியாக ஆடத்தொடங்கும் இந்திய அணி ஓப்பனிங்கில் பெரிய ஸ்கோரை அடிக்க முடியாமல் விரைவில் விக்கெட்களை இழப்பது டெஸ்ட் போட்டிகளில் தொடர் கதையாகிவிட்டது.

2 சீட்டுக்கட்டு போல் சரிந்த மிடில் ஆர்டர்

இந்திய அணி விராட் கோஹ்லியின் விக்கெட்டை இழந்த பிறகு நடுவரிசை வீரர்கள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்களை இழந்தது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை அளித்தது. ரஹானே(11),ரிஷப் பந்த்(0),பாண்டியா(4),அஸ்வின்(1) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் விளைவாக 142/3 என்ற நிலையில் இருந்து 195/8 என்ற நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டது.

3 புஜாராவின் அபார ஆட்டம்

விராட் கோஹ்லிக்கு பிறகு ஒரு முனையில் இந்திய விக்கெட்கள் சரிய மறுமுனையில் நங்கூரம் பாய்ச்சியது போல் நிலையாக நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் புஜாரா. அற்புதமாக விளையாடிய அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 132 ரன்களை எடுத்தார். டெஸ்ட் போட்டிகளில் அவர் அடித்த 15ஆவது சதம் ஆகும். இங்கிலாந்து அணிக்கெதிரான 5ஆவது சதம் மற்றும் இங்கிலாந்து மண்ணில் முதல் சதம்.

4 மொயீன் அலியின் அபார பந்துவீச்சு

முதல் மூன்று போட்டிகளில் இடம் பெறாத மொயீன் அலி இந்த போட்டியில் மிக சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார். டெஸ்ட் போட்டிகளில் அவர் 5 விக்கெட்கள் வீழ்த்துவது இது ஐந்தாவது முறையாகும்.

5 கை கொடுத்த இஷாந்த் மற்றும் பும்ரா

இந்திய அணி 195 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து தத்தளித்தது. அப்போது இஷாந்த் சர்மா மற்றும் பும்ரா இருவரும் புஜாராவுடன் இணைந்து 78 ரன்களை எடுக்க உதவினர். இஷாந்த் 14 ரன்களையும் ,பும்ரா 6 ரன்களையும் எடுத்தனர். கடைசி விக்கெட்டிற்கு இந்திய அணி 46 ரன்களை குவித்தது.
Story first published: Saturday, September 1, 2018, 16:43 [IST]
Other articles published on Sep 1, 2018
English summary
Key moments on day 2 fourth test - pujara ton makes india lead
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X