லண்டன் : இந்திய அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி இங்கிலாந்தில் சசுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரை இங்கிலாந்து அணி 3-1 என்ற நிலையில் கைப்பற்றிய நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் ஏழாம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் குக் விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இத்தொடருடன் அவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த திங்கள் கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டிக்கான 13 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் விளையாடாத ஒல்லி போப் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். கடந்த போட்டிக்கான அணியில் இடம்பெற்ற ஜேம்ஸ் வின்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அடில் ரஷீத்துக்கு பதிலாக ஒல்லி போப் களமிறக்கப்படலாம்.
குக்கின் கடைசி போட்டியான இப்போட்டியில் அவர் கேட்டான் ஜென்னிங்ஸ் உடன் களம் இறங்குவது உறுதியாகியுள்ளது. மொயீன் அலி மூன்றாம் நிலையிலும் கேப்டன் ரூட் அவரது ஆஸ்தான இடமான நான்காம் இடத்திலும் களமிறங்குவதும் ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
கிறிஸ் வொக்சின் காயத்தின் தன்மை குறித்து அவர் அணியில் இடம்பெறுவது குறித்து முடிவு எடுக்கப்படும். அவர் இடம்பெறும் பட்சத்தில் ஸ்டோக்ஸ் அமர வைக்கப்படலாம்.
விக்கெட் கீப்பிங் பணியை கடந்த போட்டியில் பட்லர் கவனித்துக்கொண்டார்.இந்த போட்டியில் பைர்ஸ்டாவ் மீண்டும் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணி விவரம் :
ஜோ ரூட்,அலிஸ்டர் குக்,கீட்டன் ஜென்னிங்ஸ், மொயீன் அலி,பைர்ஸ்டாவ்,பட்லர், பென் ஸ்டோக்ஸ்,அடில் ரஷீத்,ஸ்டுவர்ட் பிராட்,ஜேம்ஸ் ஆண்டர்சன், கிறிஸ் வோக்ஸ்,சாம் கர்ரன்