3 விக்கெட்டுகள்... அரைசதம்... இந்திய அணியை தூக்கி நிறுத்திய இளம்வீரர்கள்.. செம ட்விஸ்ட்!

பிரிஸ்பேன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையில் 4வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் ஷர்துல் தாக்கூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் இணைந்து 123 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் குவித்துள்ளனர்.

அதிரடி மன்னர்களின் அதிரடி அரைசதங்கள்... ஏமாற்றம் அளிக்காத இந்திய அணியின் பேட்டிங்

முன்னதாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் இன்னிங்சின்போது பௌலிங் செய்த இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

பிரிஸ்பேனில் 4வது டெஸ்ட்

பிரிஸ்பேனில் 4வது டெஸ்ட்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 369 ரன்களை அடித்திருந்தது. தொடர்ந்து தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

67 ரன்களை குவித்த தாக்கூர்

67 ரன்களை குவித்த தாக்கூர்

இதுவரை 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 309 ரன்களை எடுத்துள்ளது. துவக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக ரன்களை குவிக்காத நிலையில், ஷர்துல் தாக்கூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் அரைசதங்களை அடித்தனர். ஷர்துல் தாக்கூர் 67 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் 54 ரன்களை அடித்து ஆடி வருகிறார்.

அணியை தூக்கிய நிறுத்திய பார்ட்னர்ஷிப்

அணியை தூக்கிய நிறுத்திய பார்ட்னர்ஷிப்

முன்னதாக 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய நிலையில், களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் அரைசதங்களை அடித்து அணியை தூக்கி நிறுத்தினர். துவக்க வீரர்களின் நிலையற்ற ஆட்டத்தை அடுத்து 250 ரன்களை இந்தியா தாண்டுமா என்ற நிலையிலிருந்து தற்போது 300க்கும் மேல் அணியின் ஸ்கோர் உயர இவர்கள் காரணமாக அமைந்தனர்.

வீழ்த்திய வீரர்கள்

வீழ்த்திய வீரர்கள்

முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முக்கிய விக்கெட்டுகளை இவர்கள் இருவரும் எடுத்து அவர்களது ஸ்கோரை குறைக்க காரணமாக அமைந்தனர். ஷர்துல் தாக்கூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். மேலும் பார்ட்னர்ஷிப்பில் 123 ரன்களையும் இருவரும் குவித்துள்ளனர்.

67 ரன்கள் குவிப்பு

67 ரன்கள் குவிப்பு

முக்கியமாக ஷர்துல் தாக்கூரின் பங்கு இந்த ஆட்டத்தில் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. முக்கிய விக்கெட்டுகளான கமின்ஸ், பெய்ன் மற்றும் ஹாரிஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், வேடின் கேட்ச்சையும் பிடித்தார் தாக்கூர். மேலும் தற்போது 67 ரன்களை அடித்து அதகளம் செய்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Thakur and Sundar added 123 runs for the 7th wicket
Story first published: Sunday, January 17, 2021, 12:40 [IST]
Other articles published on Jan 17, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X