For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ஹர்தீப் சிங் தோல்வி !

By Karthikeyan

ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்கில் இன்று கிரேக்கோ - ரோமன் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் ஹர்தீப் சிங் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார்.

31 ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் ரியோ நகரில் நடந்து வருகிறது. 10வது நாளை எட்டியுள்ள இந்த போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர்கள் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகின்றன. துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல போட்டிகளில் இந்தியா தகுதிச்சுற்றோடு வெளியேறியது.

Rio 2016: Hardeep Singh loses his Greco Roman bout; waits for repechage result

இந்நிலையில், மல்யுத்தப் போட்டிகள் இன்று ஆரம்பமாகின. மல்யுத்தத்தின் கிரேக்கோ - ரோமன் பிரிவில் இந்தியாவின் ஹர்தீப் சிங் 93 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் துருக்கியின் செங் இடம் வீரருடன் மோதினார்.

மூன்று சுற்றுகள் கொண்ட போட்டியில் முதல் இரண்டு சுற்றிலும் துருக்கி வீரரின் கையே ஓங்கியிருந்தது. இதனால் முதல் இரண்டு சுற்றிலும் வெற்றி பெற்று 2-0 என முன்னிலைப் பெற்றார். கடைசி சுற்று இந்திய வீரர் ஹர்தீப் சிங் கைப்பற்றினார். இதனால் 1-2 என ஹர்தீப் சிங் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

Story first published: Tuesday, August 16, 2016, 21:09 [IST]
Other articles published on Aug 16, 2016
English summary
India's Greco Roman wrestler Hardeep Singh lost his opening round bout in the 98 kg category by technical points to Turkey's Ildem Cenk at the Rio Olympics, here on Tuesday
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X