For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொளுத்தும் வெயிலில் 3 மாத பயிற்சி.. இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணம்.. சக்சஸான கேப்டனின் ப்ளான்

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றதற்கு பின்னால் இந்திய வீரர்கள் பட்ட கடும் துயரங்களுக்கும், கடும் உழைப்புகளுக்கும் ஒரு சான்று தெரியவந்துள்ளது.

டோக்கியோவில் இன்று நடந்த ஒலிம்பிக் ஹாக்கி போட்டியின் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனி அணியை 4-5 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

அரையிறுதிப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு இன்று வெண்கலப்பதக்கத்திற்கான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பலம் வாய்ந்த ஜெர்மணியை எதிர்த்து இந்திய அணி போட்டிப்போட்டு வென்றுள்ளது.

'வரலாறு படைக்கப்பட்டது’ பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி.. தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து மழை! 'வரலாறு படைக்கப்பட்டது’ பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி.. தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து மழை!

வரலாறு படைப்பு

வரலாறு படைப்பு

ஒலிம்பிக் ஹாக்கியில் ஒரு காலத்தில் சிங்கமாக வலம் வந்த இந்திய அணி 8 தங்கம் உள்ளிட்ட 11 பதக்கங்களை வென்றுள்ளது. கடைசியாக கடந்த 1980ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் வெறும் 6 அணிகள் ஆடிய போட்டியில் இந்தியா தங்கம் வென்றது. 41 ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் பங்கேற்றுவரும் இந்திய ஆடவர் ஹாக்கி அணியால் ஒரு பதக்கத்தைக் கூட வெல்ல முடியவில்லை. தற்போது அந்த ஏக்கம் தீர்ந்துள்ளது.

அபார வெற்றி

அபார வெற்றி

இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி முதலில் தோல்வியின் விளிம்பிற்கு சென்றது என்றே கூறலாம். 3 - 1 என்ற சூழல் நிலவி வந்த போதும் சற்றும் மனம் தளராத இந்திய சிங்கங்கள், ஆக்ரோஷமாக ஆடி கோல் மழை பொழிந்தனர். இரு அணிகளும் விடாப்பிடியாக கோல் அடுத்து வந்ததால் ஆட்டம் ஒரு கட்டத்தில் பரபரப்படைந்தது. இறுதியில் 5 : 4 என த்ரில் வெற்றி பெற்று இந்திய அணி அசத்தியது.

குவியும் பாராட்டு

குவியும் பாராட்டு

இதனையடுத்து இந்திய அணி வீரர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பல்வேறு மாநில முதல்வர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் சச்சின் டெண்டுல்கர், சேவாக், சுரேஷ் ரெய்னா, சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

வீரர்களின் பயிற்சி

வீரர்களின் பயிற்சி

41 ஆண்டுகால காத்திருப்பை பூர்த்தி செய்த இந்த வெற்றி சாதாரணமாக வந்துவிடவில்லை. லாக்டவுனில் கூட இந்திய வீரர்கள் செய்த தியாகம் முக்கிய பங்காற்றியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு போடப்பட்டது. 2020ம் ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. இப்படி அனைவரும் கொரோனா அச்சுறுத்தலால் வீடுகளுக்கு திரும்பிய நிலையில் இந்திய ஹாக்கி அணியை மட்டும் பெங்களுரூவில் உள்ள தேசிய விளையாட்டு மையத்தில் அடைக்கப்பட்டனர்.

கேப்டனின் ஐடியா

கேப்டனின் ஐடியா

அங்கிருந்த போது, இந்திய ஹாக்கி அணி வீரர்கள் அனைவரும் மதிய வெயிலில் பயிற்சி எடுத்துக்கொள்ள கேப்டன் மன்ப்ரீத் சிங் ஐடியா கொடுத்தார். ஒலிம்பிக் தொடர் நடைபெறும் டோக்கியோ நகரில் இந்தாண்டு இந்தியாவை விட அதிக வெயில் இருக்கும் என்பதால் அதனை சமாளிக்க இந்த யோசனையை அவர் வழங்கினார். இதனை அணி பயிற்சியாளர் கிரஹாம் ரெயிட்டும் ஒப்புக்கொண்டுள்ளார்.

உடல் திறண்

உடல் திறண்

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு 3 மாதத்திற்கு முன்னர் இருந்து நாள்தோறும் மதிய வெயிலில் பயிற்சியை மேற்கொண்டுள்ளனர் இந்திய வீரர்கள். இது அவர்களின் உடல் தகுதியையும், கடின வெயிலை சமாளிக்கக்கூடிய திறனையும் அவர்களுக்கு கொடுத்துள்ளது.

நிரூபனம்

நிரூபனம்

மன்ப்ரீத் சிங்கின் கணிப்பின் படியே ஒலிம்பிக் ஹாக்கிப்போட்டியில் கடும் வெப்பம் நிலவியது. போட்டியின் போது வழக்கமாக 2 நிமிடங்கள் கூல் ட்ரிங்ஸ்கள் குடிக்க அனுமதி கொடுக்கப்படும். ஆனால் இந்த முறை கூடுதலாக 2 நிமிடங்கள் வீரர்கள், தங்களது வெப்பத்தை தணிக்க ஒதுக்கப்பட்டது. அந்த அளவிற்கு அங்கு வெயில் நிலவியது. குறிப்பாக ஒய் மைதானத்தில் டவல்களை நீரில் நினைத்து வீரர்களுக்கு கொடுக்கப்பட்டது. முன்பு பயிற்சி எடுத்துக்கொண்டதன் காரணமாக இந்திய வீரர்களால் அதனை சுலபமாக எதிர்கொண்டு பதக்கம் வெல்ல முடிந்தது.

Story first published: Thursday, August 5, 2021, 14:12 [IST]
Other articles published on Aug 5, 2021
English summary
India men's hockey team trained in the afternoons in SAI to face extreme heat in Tokyo
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X