For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடுத்த 3 ஒலிம்பிக்கிற்கான நகரங்கள் தயார்.. எங்கு, எப்போது போட்டிகள்?.. முழு விவரம் இதோ!

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் எங்கு, எப்போது நடைபெறும் என்ற கேள்வி ரசிகர்களிடயே எழுந்துள்ளது.

ஒலிம்பிக் 2020 தொடர் கடந்தாண்டே நடைபெறவிருந்தது. கொரோனா அச்சுறுத்தலாக் தள்ளிவைக்கப்பட்டு இந்தாண்டு நடைபெற்றுள்ளது.

4 மணிக்கு எழுந்து.. இந்தியர்களை கோல்ப் பார்க்க வைத்த அதிதி.. ஒலிம்பிக்கில் தரமான ஆட்டம்.. யார் இவர்? 4 மணிக்கு எழுந்து.. இந்தியர்களை கோல்ப் பார்க்க வைத்த அதிதி.. ஒலிம்பிக்கில் தரமான ஆட்டம்.. யார் இவர்?

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் தொடர் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. கொரோனாவுக்கு மத்தியிலும் 17 நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஒலிம்பிக்கில் பல்வேறு புதிய சாதனைகள் படைக்கப்பட்டது.

முடிவடைந்த ஒலிம்பிக்ஸ்

முடிவடைந்த ஒலிம்பிக்ஸ்

டோக்கியோ நகரில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் அவசர நிலை பிரகடணம் செய்யப்பட்டிருந்தது. ஒலிம்பிக் வீரர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் கிராமத்திற்கு உள்ளும் கொரோனா பரவியது. எனினும் தடைகளை தாண்டி பெரும் ரிஸ்க் எடுத்து இந்த ஒலிம்பிக் தொடர் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மற்ற ஆண்டுகளை விட இந்தாண்டு ஒலிம்பிக் தொடர் ரசிகர்களிடம் தனி கவனம் பெற்றது.

பதக்கப்பட்டியல் விவரம்

பதக்கப்பட்டியல் விவரம்

இதில் 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலப்பதக்கங்கள் என மொத்தமாக 113 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம் பிடித்தது. 88 பதக்கங்களுடன் சீனா 2வது இடம் பிடித்துள்ளது. சீனா 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம் வென்றுள்ளது. போட்டியை நடத்தி வரும் ஜப்பான் 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் வென்று 58 பதக்கங்களை வென்று 3வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியா இந்த முறை அதிக அளவாக 7 பதக்கங்களுடன் 48வது இடத்தைப்பிடித்துள்ளது.

2024 ஒலிம்பிக்

2024 ஒலிம்பிக்

இந்நிலையில் அடுத்த ஒலிம்பிக் போட்டி எங்கு நடைபெறும் என கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கெல்லாம் விடையை ஒலிம்பிக் கமிட்டி எப்போதோ கொடுத்துவிட்டது. அடுத்த ஒலிம்பிக் தொடரானது வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் பாரிஸ் நகரத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 2017ம் ஆண்டே வெளியிடப்பட்டது.

பாரிஸில் 3வதுமுறையாக போட்டி

பாரிஸில் 3வதுமுறையாக போட்டி

பாரிஸ் நகரத்தில் 3வது முறையாக ஒலிம்பிக் தொடர் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 1900ம் ஆண்டு மற்றும் 1924ம் ஆண்டு ஒலிம்பிக் தொடர்கள் பாரிஸ் நகரில் தான் நடைபெற்றது. இந்நிலையில் மீண்டும் அங்கு நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு அடுத்ததாக 3 முறை ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நகரம் பார்ஸே ஆகும். இந்த ஒலிம்பிக் போட்டி வரும் 2024ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல பாரலிம்பிக்ஸ் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது.

2028ம் ஆண்டு ஒலிம்பிக்

2028ம் ஆண்டு ஒலிம்பிக்

2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடைபெறவுள்ளது. 1996ம் ஆண்டு அட்லண்டா ஒலிம்பிக்கிற்கு பிறகு தற்போது தான் அமெரிக்க நாட்டில் ஒலிம்பிக் தொடர் நடைபெறுகிறது. அதிலும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்கனவே 1932 மற்றும் 1984ம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ள. எனவே 2028ம் ஆண்டில் நடைபெறுவது 3வது முறையாகும். இந்த போட்டிகள் 2028ம் ஆண்டு ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

2032 ஒலிம்பிக் எங்கே?

2032 ஒலிம்பிக் எங்கே?

இதே போல 2032ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரத்தில் நடத்தப்படும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 3வது ஒலிம்பிக் தொடர் இதுவாகும். இதற்கு முன்னர் 1956ம் ஆண்டு மெல்பேர்னிலும், 2000ம் ஆண்டில் சிட்னியிலும் போட்டிகள் நடைபெற்றுள்ளது. பிரிஸ்பேன் நகரத்தில் முதல் முறையாக நடத்தப்படுகிறது.

Story first published: Sunday, August 8, 2021, 23:23 [IST]
Other articles published on Aug 8, 2021
English summary
When and where will be the next Olympics? 2024, 2028 and 2032 Olympics details are announced by IOC
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X