For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிந்துவே போதும்.. நீங்க மூட்டையை கட்டி கிளம்புங்க.. கலாய்த்த ரசிகருக்கு கூலாக பதிலடி கொடுத்த சாய்னா

By Veera Kumar

ஹைதராபாத்: ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பேட்மின்டன் பிரிவில் சிந்து பைனலுக்கு தகுதி பெற்றதும், அவரது புகழ் இந்தியா முழுவதும் பரவத்தொடங்கியது.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் நேற்றைய பெண்களுக்கான அரையிறுதிப் போட்டியில் உலகின் 6வது இடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி 10வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்று அசத்தியிருந்தார்.

Saina Nehwal replies to Twitter troll

சிந்து பைனலுக்கு சென்ற நிலையில் அவரின் சக மாநிலக்காரர் சாய்னா நேவால் முதல் சுற்றிலேயே வெளியேறியது, சிந்து ரசிகர்களை கிண்டலின் எல்லைக்கு செல்ல தூண்டியது.


டிவிட்டர் பக்கத்தில் பி.வி.சிந்துவின் ரசிகர் அன்சுல் சாகர் என்பவர், சாய்னா நேவாலை கிண்டல் செய்து கருத்து வெளியிட்டிருந்தார். அதில் அவர், ;சிறந்த எதிராளியை வீழ்த்த தெரிந்தவரை கண்டுபிடித்துவிட்டோம். நீங்கள் (சாய்னா) மூட்டையை கட்டிக்கொண்டு கிளம்புங்கள் என்பதான கருத்தை பதிவிட்டிருந்தார்.

இதற்கு கோபப்படாமல் கூலாக பதில் அளித்தார் சாய்னா. "கண்டிப்பாக.. நன்றி. பிவி சிந்து உண்மையாகவே சிறப்பாக விளையாடினார். இந்தியா சிறப்பாக செயல்படுகிறது" என்று தெரிவித்தார்.

சாய்னா பதிலளித்ததை பார்த்து, தனது தவறை உணர்ந்த அந்த ரசிகர், உங்களை காயப்படுத்தியதற்கு மன்னித்து விடுங்கள் என்றும், சரியாக விளையாடவில்லை என்ற அர்த்தத்தில் நான் குறிப்பிடவில்லை. நான் இப்போதும் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். "ஒரு பிரச்சனையும் இல்லை நண்பா, உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்" என்று சாய்னா அதற்கும் பதில் தெரிவித்தார்.

இதனிடையே சாய்னா ரசிகர்கள், டிவிட்டரில் அன்சுல் சாகரை வறுக்க தொடங்கிவிட்டனர். ஆனால், அவரோ, "என்னுடைய மன்னிப்பை சாய்னா ஏற்றுக் கொண்டதால், யாருக்கும் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று டிவிட்டரில் தெரிவித்துவிட்டார்.

Story first published: Saturday, August 20, 2016, 13:43 [IST]
Other articles published on Aug 20, 2016
English summary
Badminton star Saina Nehwal has put a Twitter troll claiming to be her "fan" in his place and then got an apology from the individual.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X