For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடந்த டி20 உலககோப்பையில் விளையாடாத வீரர்கள்.. 5 பேருக்கு இம்முறை வாய்ப்பு.. பிசிசிஐ அதிரடி மாற்றம்

மும்பை : 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில், கடந்த முறை இடம்பெறாத 5 வீரர்களுக்கு பிசிசிஐ வாய்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கும், இம்முறையும் சரியாக 12 மாதங்கள் இடைவெளி உள்ள நிலையில், இந்திய அணி பல மாற்றங்களை செய்துள்ளது.

கேப்டன் முதல் பயிற்சியாளர் வரை தற்போது மாற்றப்பட்டுள்ள நிலையில், அணி தேர்விலும் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த நிலையில், 2022 டி20 உலகக் கோப்பை தொடரில் இடம்பெற்றுள்ள 5 வீரர்கள் குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் தற்போது காணலாம்.

இது இறுதியான இந்திய அணி கிடையாது.. டி20 உலககோப்பைக்கு முன் மாற்றம் நிகழும்.. பிசிசிஐ செம டிவிஸ்ட்இது இறுதியான இந்திய அணி கிடையாது.. டி20 உலககோப்பைக்கு முன் மாற்றம் நிகழும்.. பிசிசிஐ செம டிவிஸ்ட்

தீபக் ஹூடா

தீபக் ஹூடா

27 வயதான தீபக் ஹூடா, நடுவரிசையில் களமிறங்கி அதிரடியாக விளையாட கூடியவர். மேலும், சுழற்பந்தும் வீசக்கூடியவர். இதனால், இந்திய அணிக்கு முதல் முறையாக பிப்ரவரி மாதத்தில் விளையாடி அடுத்த 6 மாதத்தில், டி20 உலகக் கோப்பையில் இடம் பிடித்துவிட்டார். அதிரடி வீரர் ரிஷப் பண்ட்க்கு பதிலாக ஹூடாவை வைத்து விளையாடுங்கள் என்று சொல்லும் அளவுக்கு தனககென ஒரு பெயரை உருவாக்கிவிட்டார்.

ஹர்சல் பட்டேல்

ஹர்சல் பட்டேல்

கடந்த 2021 ஐபிஎல் தொடரில் 32 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்சல் பட்டேலுக்கு அப்போது டி20 உலகக் கோப்பை தொடரில் வாய்ப்பு தராமல் தேர்வுக்குழு தவறு செய்துவிட்டது. ஆனால், இம்முறை, முதல் முறையாக டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஹர்சல் பட்டேல் இடம் பிடித்துவிட்டார். பந்தின் வேகத்தை குறைத்து விக்கெட்டுகளை வீழ்த்தும் ,ஹர்சல் பேட்டிங்கிலும் ஒரு அளவு கை கொடுப்பார்.

சாஹல்

சாஹல்

கடந்த முறை இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் தோல்வி அடைந்ததற்கு பார்மில் இல்லாத சாஹலுக்கு வாய்ப்பு தரப்படாதது தான் காரணம் என்று குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. தற்போது அந்த குறையை பிசிசிஐ போக்கியுள்ளது. சாஹலின் லெக் ஸ்பின், ஆஸ்திரேலிய ஆடுகளத்திற்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஆர்ஸ்தீப் சிங்

ஆர்ஸ்தீப் சிங்

22 வயதான இடதுகை வேகப்பந்துவீச்சாளரான ஆர்ஸ்தீப் சிங், டி20 ஓவரில் இறுதிக் கட்டத்தில் கட்டுக்கோப்பாக பந்துவீசி நெருக்கடி தரக்கூடியவர். இந்திய பந்துவீச்சாளர்களில் குறைவான ரன் கொடுக்கும் வீரர் என்ற பெயரை பெற்ற, ஆர்ஸ்தீப் சிங் முதல் முறையாக டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார்.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

கடைசியாக 2019 ஐசிசி உலககோப்பை தொடரில் விளையாடிய தினேஷ் கார்த்திக், தன்னுடைய 37 வது வயதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் தற்போது ,இந்திய டி20 அணிக்கு திரும்பியுள்ளார். ஃபினிஷர் ரோலில் கலக்கும் தினேஷ் கார்த்திக், வரும் டி20 உலககோப்பையில் இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, September 13, 2022, 19:55 [IST]
Other articles published on Sep 13, 2022
English summary
5 India Players who did not played last year t20 world cup selected for this year edition கடந்த டி20 உலககோப்பையில் விளையாடாத வீரர்கள்.. 5 பேருக்கு இம்முறை வாய்ப்பு.. பிசிசிஐ அதிரடி மாற்றம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X