
மிஸ் செய்த டோணி
17வது ஓவரை ஸ்பின் பவுலர் மிட்சேல் சான்ட்னர் வீசியபோதுதான் அந்த நிகழ்வு அரங்கேறியது. கிரீசை விட்டு இறங்கி வந்து ஆட முற்பட்டார் டோணி. ஆனால் பந்து மிஸ்சாகி விக்கெட் கீப்பரை நோக்கி சென்றது.
டோணி யோகாசனம்
துரிதமாக செயல்பட்ட டோணி, வலது காலை பின்னால் வைத்து கிரீசை டச் செய்துவிட்டார். ஆனால் இடதுகாலோ பல அடி முன்னால் இருந்தது. கிட்டத்தட்ட யோகாசனம் செய்பவரை போல காணப்பட்டார் டோணி.

டோணி நிதான ஆட்டம்
இந்த படம்தான் இப்போது வைரலாக சுற்றி வருகிறது. டோணி அப்போட்டியில் முதலில் மெதுவாக ஆரம்பித்தாலும், பிறகு சற்று அதிரடி காட்டினார். ஆனால் டார்கெட் மிக அதிகம் என்பதால் இந்திய அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை.

விட்டுக்கொடுக்காத கோஹ்லி
ரசிகர்கள் டோணியை விமர்சனம் செய்தாலும், கேப்டன் கோஹ்லி அவரை விட்டுக்கொடுக்கவில்லை. இதுகுறித்து கூறுகையில், டோணி தன்னால் முடிந்ததை செய்தார். ஆனால் டார்கெட் மிக அதிகம் என்பதால் எட்டுவது சிரமமாக மாறியது. நானும் முடிந்த அளவுக்கு முயன்றேன். ஆனால், ஏதாவது ஒரு பேட்ஸ்மேனாவது 200 ஸ்டிரைக் ரேட்டுடன் அதிரடியாக ஆட வேண்டிய கட்டாயம் இருந்தது. இவ்வாறு கோஹ்லி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











