For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பண்ட் - ஹர்த்திக் மீண்டும் விளாசல்....போராடி இலக்கை நிர்ணயித்த இந்தியா.தொடரை வெல்லுமா இங்கிலாந்து!

புனே: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி கடும் போராட்டத்திற்கு பிறகு இலக்கை நிர்ணயித்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று புனேவில் தொடங்கியது.

மேலும் 3 வீரர்களுக்கு கொரோனா..... உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் சலசலப்பு... விவரம் இதோ! மேலும் 3 வீரர்களுக்கு கொரோனா..... உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் சலசலப்பு... விவரம் இதோ!

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து இங்கிலாந்திற்கு கடின இலக்கை நிர்ணயித்துள்ளது.

 இங்கிலாந்து தொடர்

இங்கிலாந்து தொடர்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் மற்றும் டி20 தொடரை இழந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் போட்டி தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. எனவே வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று புனேவில் தொடங்கவிருக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

அடுத்தடுத்து விக்கெட்

அடுத்தடுத்து விக்கெட்

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோகித் - ஷிகர் தவான் ஆகியோர் நிதானமாக ஆடினர். எனினும் இந்த ஜோடியை அடில் ரஷித் பிரித்தார். இதனால் ரோகித் சர்மா 37 ரன்களுக்கும், மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவான் 67 ரன்களுக்கும் அவுட்டாகி வெளியேறினர். இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் கோலி (7) மற்றும் கே.எல்.ராகுல் (7) ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு வெளியேறியதால் இந்திய அணி தடுமாறியது.

அதிரடி ஜோடி

அதிரடி ஜோடி

இதனையடுத்து ஜோடி சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர்கள் ரிஷப் பண்ட் - ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் இங்கிலாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். அதிரடி ஆடிய ரிஷப் பண்ட் 62 பந்துகளில் 78 அடித்து அவுட்டானார். அதே போல் மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஹர்த்திக் 44 பந்துகளில் 64 ரன்களை விளாசி பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இலக்கு

இலக்கு

பின்னர் களமிறங்கிய க்ருணால் பாண்டியா (25),ஷர்துல் தாக்கூர் ( 30) என சீரான இடைவெளியில் வெளியேற, இந்திய அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 329 ரன்களை குவித்தது. இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மார்க் வுட் 3 விக்கெட்கள், அடில் ரஷித் 2 விக்கெட்டும் மற்றவர்கள் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதனையடுத்து 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து ஆடி வருகிறது.

Story first published: Sunday, March 28, 2021, 18:04 [IST]
Other articles published on Mar 28, 2021
English summary
Hardik, pant Knoks helps india to set huge target against england in 3rd ODI against England
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X