கோபாலபுர வீட்டில்.. இன்னமும் 'தோனி, சச்சின்' ஃபோட்டோ.. கடைசி வரை.. மேட்ச் பார்த்த கலைஞர்

சென்னை: மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் ஃபேவரைட் ஸ்போர்ட்ஸ் என்றால் அது கிரிக்கெட் மட்டுமே. அதுவும், அப்டேட்ஸ் அறிந்து வைத்திருப்பதில் கலைஞருக்கு நிகர் கலைஞர் தானாம்.

முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி மறைந்த பிறகு, அவரது மகன் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்துள்ளது. அதுவும் பெரும்பான்மை ஆட்சி.

வாய்ப்பு இருக்கு.. இந்தியாவிலேயே ஐபிஎல் நடத்தலாம்.. முன்னாள் அதிகாரியின் தகவல்.. சாத்தியமா?

'கலைஞர் இருந்தப்பவே இந்த வெற்றியை பெற பாடுபட்டோம்.. ஆனா முடியல. இப்போ ஆட்சிக்கு வந்துட்டோம், அவர் இல்ல' என்று முதல்வராக பதவியேற்றுக் கொண்ட பிறகு, கலைஞர் வாழ்ந்து மறைந்த கோபாலபுரம் இல்லம் சென்று கண்ணீர் வடித்தார் மு.க.ஸ்டாலின்.

 தோனி புகைப்படம்

தோனி புகைப்படம்

கலைஞரின் கோபாலபுரம் இல்லம் தான் மு.க.ஸ்டாலின் அரசியல் பயின்ற களம். அவருக்கு மட்டுமல்ல, கலைஞரின் ஏற்ற, இறக்கங்களை, வெற்றித் தோல்விகளை பார்த்த இல்லம் அது. அதேசமயம், அரசியலுக்கு அப்பாற்பட்டு சினிமா, விளையாட்டு என பல சுவாரஸ்யங்களை தன்னகத்தே உள்ளடக்கிய வீடு அது. அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் புகைப்படம் இன்னமும் அதே கோபாலபுரம் இல்லத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.

 ரசித்த விளையாட்டு

ரசித்த விளையாட்டு

இதுகுறித்து, நாம் மூத்த பத்திரிகையாளரும், இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தின் எடிட்டர் செல்வராஜ் அவர்களிடம் பேசினோம். அவர் கூறுகையில், "கலைஞர் கருணாநிதியிடம் மிக நெருக்கமாக இருந்தவர் மறைந்த ஜெ.அன்பழகன். அவர் கலைஞர் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்துக்கு பகிர்ந்த செய்திகள் இவை. ‘கலைஞர் கருணாநிதி வாழ்க்கையில் ரொம்ப ரசிச்ச விளையாட்டு, கிரிக்கெட். எந்த நாடு, எந்த டீம் விளையாடுது என்றெல்லாம் பார்க்கமாட்டார். யாரு நல்லா விளையாடினாலும் ரசிப்பார். ஜஸ்ட் அப்படியே பார்ப்பதோடு இல்லாமல், கிரிக்கெட் வீரர்கள் பலரது பெயரையும் சரியாக நினைவில் வைத்திருப்பார்.

 இந்தியா வின் பண்ணும்யா

இந்தியா வின் பண்ணும்யா

கடைசி காலங்களில் உடல்நலம் காரணமாக வீட்டிலேயே இருக்க வேண்டியிருந்ததால், மேட்ச் நடந்தால் அதை முழுமையாக பார்த்துவிடுவார். இந்தியா ஆடினால், அவரது முழு சப்போர்ட்டும் இந்தியாவுக்கு தான். 'இந்தியா வின் பண்ணும்யா'-னு பாஸிட்டிவா பேசுவார். அதேசமயம், நல்லா ஆரோக்கியமா இருந்தபோது, சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு கிரிக்கெட் பார்க்கப் போயிருக்கார்.

 தீவிர ரசிகர்

தீவிர ரசிகர்

கடைசியா 2006 காலகட்டத்தில் முதல்வராக இருந்தபோது போய் பார்த்தார். ஐபிஎல் மேட்ச், டெஸ்ட் மேச்சையும் கூட பார்ப்பார். சில நேரங்களில் வேறு ஏதாவது ஃபோன் கால்ஸ் வந்தாலும், ‘கொஞ்சம் பொறுய்யா. வாரேன்'ன்னு மேட்ச்சை பார்த்துட்டு வருவார். அந்த அளவுக்கு தீவிர கிரிக்கெட் ரசிகர் கலைஞர்.

 கலைஞர் பேவரைட்

கலைஞர் பேவரைட்

குறிப்பா, இந்தியா மேட்ச் நடக்கும் போது, 'டெண்டுல்கர் இன்னைக்கு அடிப்பாருய்யா' என்பார். ஒருவேளை சச்சின் அந்த மேட்ச் அடிக்காவிட்டால், 'எல்லா மேட்ச்லயும் ஆட முடியாதுப்பா' என்பார். சென்னையில் மேட்ச் நடந்த போது டெண்டுல்கரும், கலைஞரும் சந்திச்சு எடுத்த ஃபோட்டோ கோபாலபுரம் வீட்டில் இருக்கு. கபில்தேவையும், டெண்டுல்கரையும் தலைவருக்கு ரொம்ப பிடிக்கும். இறுதியாக, தோனியின் ஆட்டத்தை அவர் வெகுவாக ரசித்தார். தோனியை சிலாகித்து பேசுவார்" என்றார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
former skipper dhoni photo karunanidhi house - தோனி
Story first published: Wednesday, May 12, 2021, 13:41 [IST]
Other articles published on May 12, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X