அவர்தான் இவரா? இந்திய பவுலர்களை கிழித்து தொங்க விட்ட மேக்ஸ்வெல்.. நெட்டின்சன்கள் செம கிண்டல்!

சிட்னி: இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்ட மேக்ஸ்வெல் தொடர்பாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில், தற்போது இரண்டாவது போட்டி நடந்து வருகிறது.

இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 389 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஸ்மித் சதம் அடித்தார். வார்னர், லபுசென், பின்ச், மேக்ஸ்வெல் அரைசதம் அடித்தனர். இமாலய இலக்கை நோக்கி இந்திய அணி தொடர்ந்து ஆடி வருகிறது.

இந்த முறை கோப்பையை கைப்பற்றாம விடமாட்டோம்... சென்னையின் எஃப்சி கோச் உறுதி

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. முதல் போட்டியில் பலத்த அடி வாங்கிய பிறகும், இந்திய பவுலர்கள் திருந்தியபாடில்லை. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா பவுலர்களை துவைத்து எடுத்து 50 ஒவர்களில் 389 ரன்கள் குவித்தது.

எல்லோரும் வெளுத்து வாங்கினார்கள்

எல்லோரும் வெளுத்து வாங்கினார்கள்

வார்னர், பின்ச், சுமித் என வருகிறவர்கள் எல்லாம் வெளுத்து வாங்கினார்கள். சுமித் சதம் அடித்தார். அதிரடி வீரர் மேக்ஸ்வெல் ருத்ரதாண்டவம் ஆடினார். பும்ரா, ஷமி, சாஹல் என தரம் வாய்ந்த பவுலர்களையும் கதறடித்தார். 29 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மேக்ஸ்வெல் ஆட்டம்

மேக்ஸ்வெல் ஆட்டம்

மேக்ஸ்வெல் ஆட்டம் தொடர்பாக நெட்டிசன்கள் மீஸ்கள் குவித்து வருகின்றனர். அண்மையில் நடத்த ஐபிஎல்லில் பஞ்சாப் அணியில் விளையாடிய மேக்ஸ்வெல் படு மோசமாக விளையாடினார். அவரா இவர் என்ற அளவுக்கு தற்போது பட்டையை கிளப்பி வருகிறார்.

 ஐபிஎல் பார்ம்

ஐபிஎல் பார்ம்

அதாவது ஐபிஎல்லில் 11 போட்டிகளில் விளையாடி 106 பந்துகளில் 108 ரன்கள்தான் எடுத்தார். ஆனால் இந்த தொடரில் 48 பந்துகளில் 108 ரன்கள் எடுத்துள்ளார். இதனை தொடர்புபடுத்தி நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பலர் அரசியல் தலைவர்களை மேக்ஸ்வெளுடன் தொடர்புபடுத்தியும் மீம்ஸ்களை பறக்க விட்டு வருகின்றனர்.

போதும் மேக்ஸ்வெல் இந்தியாவை விட்ருங்க

போதும் மேக்ஸ்வெல் இந்தியாவை விட்ருங்க

போதும் மேக்ஸ்வெல் இந்தியா விட்ருங்க... என்ற பலரின் அழுகுரலையும் மீம்ஸ்கள் வாயிலாக பார்க்க முடிகிறது. இப்போது பஞ்சாப் அணியின் உரிமையாளர் நடிகை பிரித்தி ஜிந்தா மனசுல என்ன நினைப்பார் எனவும் அவரது புகைப்படத்தை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகின்றனர். ஆக மொத்தத்தில் இன்றைய போட்டியால் சமூக வலைத்தளம் களைகட்டியுள்ளது .

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Glenn maxwell Batting against India: Trolls are going viral on social media during the second ODI between India and Australia.
Story first published: Sunday, November 29, 2020, 17:11 [IST]
Other articles published on Nov 29, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X