For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அம்பதி ராயுடு பந்து வீச தடை! கேலி, கிண்டல் செய்து ஐசிசி-யை தெறிக்க விட்ட ரசிகர்கள்

Recommended Video

அம்பதி ராயுடு பந்து வீச தடை!.. ஐசிசி-யை கிண்டல் செய்த ரசிகர்கள்- வீடியோ

துபாய் : இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீச ஐசிசி தடை விதித்துள்ளது.

அம்பதி ராயுடு ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இரண்டு ஓவர்கள் பந்து வீசினார். அப்போது அவரது பந்துவீச்சு முறை விதிகளுக்கு உட்பட்டது தானா என்ற சந்தேகம் எழுந்தது.

பரிசோதனைக்கு செல்லவில்லை

பரிசோதனைக்கு செல்லவில்லை

இதனையடுத்து, ஐசிசி அம்பதி ராயுடு-வின் பந்துவீச்சை பரிசோதிக்க முடிவு செய்தது. 14 நாட்களுக்குள் அம்பதி ராயுடுவை பந்து வீச்சு பரிசோதனைக்கு வருமாறு ஐசிசி கேட்டுக் கொண்டது. ஆனால், அம்பதி ராயுடு பரிசோதனைக்கு செல்லவில்லை என்பதால் ஐசிசி அவருக்கு பந்து வீச தடை விதித்துள்ளது.

இழப்பு இல்லை

இழப்பு இல்லை

அம்பதி ராயுடு தற்போது நியூசிலாந்து தொடரில் ஆடி வரும் நிலையில், ஐசிசி பரிசோதனைக்கு உட்படவில்லை. மேலும், அம்பதி ராயுடு பந்து வீச்சாளர் இல்லை என்பதால் இந்திய அணிக்கு இழப்பு ஏதும் இல்லை.

அந்த 2 ஓவர்கள்

அந்த 2 ஓவர்கள்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஷமி போட்டியில் இருந்து சிறிது நேரம் விலகி இருந்தார். அந்த சமயத்தில் பந்துவீச்சில் ஓவர்களை சமாளிக்க அம்பதி ராயுடுவை இரண்டு ஓவர்கள் வீச வைத்தார் கேப்டன் கோலி.

முத்தையா முரளிதரன் சர்ச்சை

முத்தையா முரளிதரன் சர்ச்சை

அம்பதி ராயுடுவின் பந்துவீச்சு முறை இலங்கையின் முத்தையா முரளிதரன் பந்துவீச்சை போல இருந்தது. முரளிதரன் தன் காலத்தில் பந்து முறை விதிகளுக்கு உட்பட்டு இல்லை என சிக்கலில் சிக்கியது போன்றே, அம்பதி ராயுடுவும் சிக்கினார்.

தற்காலிக தடை

தற்காலிக தடை

ஐசிசி அம்பதி ராயுடுவுக்கு பந்து வீச தடை விதித்துள்ளது. அவர் பேட்டிங் ஆட எந்த தடையும் இல்லை என்பதால் அவர் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கலாம். மேலும், இந்த தடையும் கூட தற்காலிகமானது தான். ராயுடு ஐசிசி முன் ஆஜராகி பந்து வீச்சு பரிசோதனைக்கு ஒத்துழைத்தால், அதன் பின் விதிகளுக்கு உட்பட்டு அம்பதி ராயுடு பந்து வீச முடியும் என இந்த தடை குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பின்னடைவு இல்லை

பின்னடைவு இல்லை

ராயுடுவின் தடை இந்திய அணிக்கு பின்னடைவு இல்லை என்றே ரசிகர்கள் கருதுகிறார்கள். அது மட்டுமில்லாமல், ட்விட்டரில், ஐசிசியின் தடையை நக்கல், நையாண்டி செய்து வருகிறார்கள் சில குறும்பு ரசிகர்கள். அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.

மிகப் பெரிய இழப்பு

இந்திய பந்து வீச்சுக்கு இந்த தடை மிகப் பெரிய இழப்பு எனக் கூறி நக்கல் அடித்துள்ளார் இந்த ரசிகர்.

யார் 10 விக்கெட் எடுப்பாங்க?

இனிமே இந்தியாவுக்கு யார் 10 விக்கெட்டையும் எடுப்பாங்க? என கண்ணீர் விட்டு காமெடி செய்துள்ளார் இந்த ரசிகர்.

எப்ப பௌலிங் போட்டாரு?

இவர் எப்ப பௌலிங் போட்டாரு நான் பார்க்கவே இல்லையே? என கிண்டல் அடித்துள்ளார் இவர்.

ஞாபகமே இருக்காது

கடைசியா எப்ப பௌலிங் போட்டோம்னு அவருக்கே ஞாபகம் இருக்காது என்கிறார் இவர்.

Story first published: Monday, January 28, 2019, 17:07 [IST]
Other articles published on Jan 28, 2019
English summary
India vs Newzealand : Ambati Rayudu suspended from bowling in International cricket
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X