For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய டி-20 அணி அறிவிப்பு.. அணிக்கு திரும்பிய தினேஷ் கார்த்திக்.. கேப்டனாக ராகுல் நியமனம்

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 5டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

வரும் 9ஆம் தேதி தொடங்கும் இந்தப் போட்டிக்கு 18 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

நடப்பு சீசனில் சிஎஸ்கே பாசிட்டிவ் என்ன..? அடுத்த வருசம் சிஎஸ்கே எப்படி விளையாடும்.. ஃபிளமிங் பதில்நடப்பு சீசனில் சிஎஸ்கே பாசிட்டிவ் என்ன..? அடுத்த வருசம் சிஎஸ்கே எப்படி விளையாடும்.. ஃபிளமிங் பதில்

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக இந்த தொடரில் கேஎல் ராகுலும், துணை கேப்டனாக ரிஷப் பண்டும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ருத்துராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், சாஹல், குல்தீப் யாதவ், ரவி பிஸ்னாய், அக்சர் பட்டேல், புவனேஸ்வர்குடார், ஹர்சல் பட்டேல், அவேஷ் கான், ஆர்ஸ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

மும்பை அணியில் சிறப்பாக விளையாடிய திலக் வர்மா, குஜராத் அணியில் சிறப்பாக விளையாடிய ராகுல் திவாட்டியா மற்றும் எஸ்ஆர்ஹச் வீரர் ராகுல் திரிபாதி ஆகியோருக்கு பேட்டிங்கில் வாய்ப்பு தரவில்லை. தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்ட அதே அணியில் ரிஷப் பண்டும் உள்ளார். இதனால் தினேண் கார்த்திக்கிற்கு இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

இதே போன்று இலங்கைக்கு எதிரான டி20 அணியில் இடம்பிடித்த சஞ்சு சாம்சனுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் டி20 உலககோப்பையில் அவருக்கு இடம் கிடைக்காது என தெரிகிறது. 3ஆண்டுக்கு பிறகு தினேஷ் கார்த்திக் அணிக்கு திரும்பியுள்ளது குறித்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

அட்டவணை

அட்டவணை

ஜூன் 9 முதல் டி20 டெல்லி

ஜூன் 12 இரண்டாவது ட20 கட்டாக்

ஜூன் 14 மூன்றாவது டி20 விசாகப்பட்டினம்

ஜூன் 17 நான்காவது டி20 ராஜ்காட்

ஜூன் 19 ஐந்தாவது டி20 பெங்களூரு

டெஸ்ட் அணி விவரம்

டெஸ்ட் அணி விவரம்

இதே போன்று இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரோகித் சர்மா கேப்டனாகவும், ராகுல் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். விராட் கோலி, சுப்மான் கில், புஜாரா, ஸ்ரேயாஸ் ஐயர், விஹாரி, ரிஷப் பண்ட், பரத், ஜடேஜா, அஸ்வின் , ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, பும்ரா, சிராஜ், உமேஷ் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Story first published: Sunday, May 22, 2022, 18:57 [IST]
Other articles published on May 22, 2022
English summary
Indian team for SA series announced- Dinesh karthik is back in indian team இந்திய டி-20 அணி அறிவிப்பு.. அணிக்கு திரும்பிய தினேஷ் கார்த்திக்.. கேப்டனாக ராகுல் நியமனம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X