சின்னப்பசங்கள... இப்டி பண்ணிட்டாங்களே.. ஐபிஎல்-ஐ அதிரவைத்த 4 இளம் வீரர்கள்!

சென்னை: ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இளம் வீரர்கள் 4 பேர் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் பெற்றுள்ளனர்.

ஐபிஎல் தொடர் கடந்த 9ம் தேதி முதல் தொடங்கி தற்போது வரை 4 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. அனைத்து ஆட்டங்களும் இளம் வீரர்களின் சிறப்பான செயல்பாட்டால் விறுவிறுப்பாக சென்றது.

இந்நிலையில் அணியின் முக்கிய கட்டமான கடைசி ஓவர்களில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத 4 இந்திய இளம் வீரர்கள் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

ஹர்ஷல் பட்டேல்

ஹர்ஷல் பட்டேல்

பெங்களூரு அணியை சேர்ந்த இவர், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக செயல்பட்டு, தனது தொடக்க போட்டியிலேயே 5 விக்கெட்கள் எடுத்து அசத்தினார். இந்த போட்டியில் மும்பை அணியின் ஸ்கோர் மலமலவென உயர்ந்த நிலையில் முக்கிய வீரர்களான பொல்லார்ட், இஷான் கிஷன், ஹர்த்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா, மார்கோ ஜான்சென் ஆகியோரை வீழ்த்தி ரன்னை கட்டுக்குள் கொண்டு வந்தார்.

ஆவேஷ்

ஆவேஷ்

டெல்லி அணி வீரரான ஆவேஷ் கான் சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்து கெத்து காட்டி 2 விக்கெட்களை சாய்தார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தோனியை டக்கவுட் முறையில் அவுட்டாக்கினார். அதே போல முன்னணி வீரர் டூப்ளசிஸையும் எல்பிடபுல்யூ முறையில் ஆவுட்டாக்கினார். மொத்தம் 4 ஓவர்கள் வீசிய அவர், 23 ரன்களே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

சேட்டன்

சேட்டன்

ராஜஸ்தான அணி பவுலரான சேட்டன் சக்ரியா, பஞ்சாப் அணியின் டாப் ஆர்டரை கலட்டினார். குறிப்பாக ராகுல், மயங்க் அகர்வா, ஜெயி ரிச்சர்ட்சன் ஆகியோரது விக்கெட்களை எடுத்தார். மொத்தம் 4 ஓவர்கள் வீசிய இவர், 3 விக்கெட்ளை எடுத்து 31 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

சாம்சன்

சாம்சன்

நேற்று நடைபெற்ற பஞ்சாப் - ராஜஸ்தான் போட்டியில் சஞ்சு சாம்சன், பஞ்சாப் அணிக்கு தலைலைவலியாக இருந்துவந்தார். இந்த போட்டியில் 4ஓவர்களி விசிய இளம் வீரர் அர்ஷிப் சிங் 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். குறிப்பாக கடைசி ஓவரில் சாம்சனை லாவகமாக அவுட்டாக்கி பஞ்சாப் அணியின் த்ரில் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
4 Indian uncapped bowlers bowled brilliantly in death overs
Story first published: Tuesday, April 13, 2021, 14:43 [IST]
Other articles published on Apr 13, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X