For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவர ஏன் மிஸ் பண்ணீங்க? மும்பை அணி ரசிகர்கள் கோபம்-தக்கவைத்துள்ள வீரர்கள் யார்?

மும்பை ; ஐ.பி.எல். 2022ஆம் தொடரில் களமிறங்கும் மும்பை அணி வீரர்கள், தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது

இதில் யாரும் எதிர்பாராத புதிய டிவ்ஸ்டை மும்பை அணி நிர்வாகிகள் செய்துள்ளனர்.

மும்பை அணியின் முதுகு எலும்பாக இருந்த பல வீரர்களை அந்த அணியே விடுவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரோகித் சர்மா

ரோகித் சர்மா

மும்பை அணி தனது முதல் வீரராக கேப்டன் ரோகித் சர்மாவை தக்க வைத்துள்ளது, அவருக்கு 16 கோடி ரூபாய் தரப்பட உள்ளது. 5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்று தந்த ரோகித் சர்மா கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் மும்பை அணிக்கு தொடர்ந்து கலக்க உள்ளார்

பும்ரா

பும்ரா

மும்பை அணி 2வது வீரராக வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை தக்க வைத்துள்ளது. பும்ரா மும்பை அணியின் பந்துவீச்சின் தலையாக செயல்பட்டவர். பும்ராவுக்கு 12 கோடி ரூபாய் தரப்பட உள்ளது. பும்ரா இடம்பெற்றுள்ளது மும்பை அணிக்கு பலமாக கருதப்படுகிறது.

சூரியகுமார் யாதவ்

சூரியகுமார் யாதவ்

யாரும் எதிர்பாராத வகையில் மும்பை அணி அதிரடி வீரர் சூரியகுமார் யாதவை தக்க வைத்துள்ளது. சூரியகுமார் யாதவ் கடந்த ஐ.பி.எல் தொடரின் சில போட்டிகளில் ரன் குவிக்க தவறிய போதும் அவரை 8 கோடி ரூபாய் கொடுத்து மும்பை அணி தக்க வைத்துள்ளது.

பொலார்டு

பொலார்டு

மும்பை அணி 4வது வீரராக பொலார்டை தகக வைத்துள்ளது. அவருக்கு 6 கோடி ரூபாய் தான் தரப்பட உள்ளது. பொலார்ட் தொடர்ந்து மும்பை அணிக்காக விளையாடி வந்தார். தற்போது அந்த பயணம் மீண்டும் தொடர உள்ளது. இந்த 4 வீரர்களை தக்க வைத்துள்ளது மூலம் மும்பை அணி பலமாகவே காணப்படுகிறது.

பாண்டியா சகோதரர்கள்

பாண்டியா சகோதரர்கள்

மும்பை அணியின் பலமாக கருதப்பட்ட ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விடுவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. காயம் காரணமாக அவர் சரியாக விளையாடவில்லை என்றாலும், முழு உடல் தகுதி பெற்றால் அவர் மிகவும் அபாயகரமான வீரர் தான். ஆனால் மும்பை அணி ஏன் இந்த முடிவு எடுத்துள்ளது என தெரியவில்லை. இதே போன்று குர்னல் பாண்டியா, அதிரடி இளம் வீரர் இஷான் கிஷனும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Story first published: Tuesday, November 30, 2021, 22:45 [IST]
Other articles published on Nov 30, 2021
English summary
MI Miss Key Players to Retain For IPL 2022.MI Picks Rohit Sharma For 16 crores and Missed Pandya Brothera
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X